திவாலாகும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தைக் காப்பாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக அந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வாரிய உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.
ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனமானது சிறந்த பெரு நிறுவன நிர்வாக விருதை வென்றுள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் அரியலூர் ஆலையானது சர்வதேச உற்பத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்தியப் பசுமை உற்பத்திக்கான சவாலில் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளது.