இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான சக்திகாந்த தாஸ், டாக்டர் Y.V. ரெட்டி மற்றும் R. ரெட்டி ஆகியோர் இணைந்து எழுதிய “இந்திய நிதியியல் கூட்டாட்சி முறை” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
ஸ்கைட்ராக்ஸ் உலக விமான நிலைய விருதுகளானது சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை உலகின் சிறந்த வான்பயண மையமாக ஏழாவது முறையாக அறிவித்துள்ளது.
இதில் புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமானது 8 இடங்கள் முன்னேறி 59-வது இடத்தில் உள்ளது.
பெண்கள் மேம்பாடு 2019-ல் சிறப்பாகப் பணியாற்றியதற்காக புதுதில்லி அரசுப் பள்ளி ஆசிரியரான மனு குலாட்டி கௌரவிக்கப்பட்டார்.
இந்த விருதானது பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவித்தலுக்காக வழங்கப்படுகின்றது.
மத்திய அரசின் ஆற்றல் நிதியியல் கழகமானது ஊரக மின்வசதியாக்கக் கழக நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளைப் பெற்றதையடுத்து இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய அரசிற்குச் சொந்தமான நிதியியல் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
சந்தை மூலதன மதிப்பாக்கத்தை கொண்டு செயல்படும் பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்த இடத்தில் இந்த நிதியியல் நிறுவனம் உள்ளது.
கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (APSEZ - Adani Port and Special Economic Zone) ஆனது 2018-19ல் 200 மில்லியன் டன்கள் சரக்குகளைக் கையாண்ட முதலாவது இந்திய துறைமுகமாக உருவெடுத்துள்ளது.
இந்த துறைமுகமானது கணக்கிடப்பட்ட காலமான 2020 ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது.