TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 2 , 2019 2068 days 636 0
  • இந்தியாவின் தந்தையான மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தைக் குறிப்பதற்காக பொலிவியாவின் கேப்ரியல் ரெனி மோர்னோ பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி அரங்கத்தின் பெயர்ப் பலகையை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
  • பெருநகர சென்னை மாநகராட்சியானது 3,030 கிலோ வாட் மொத்தத் திறனுடன் 662 கட்டிடங்களின் கூரைகளின் மீது சூரிய ஒளித் தகடுகளைப் பொருத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அது தனது ஆற்றல் செலவில் ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் ரூபாய் சேமிக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சீன இரயில்பெட்டி உற்பத்தியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப்பெரிய இரயில்பெட்டி கட்டுமான நிறுவனமாக சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலை (Integral Coach Factory - ICF) உருவெடுத்துள்ளது.
  • ஐரோப்பாவைச் சேர்ந்த எஸ்தோனியா நாட்டில் சமீபத்தில் நிறைவு பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 44 சதவிகித வாக்குப் பதிவுடன் நிகழ்நேர வாக்குப் பதிவில் உலகின் முன்னணி நாடாக அது உருவெடுத்துள்ளது.
  • சீனாவின் லாங் மார்ச் 3B விண்கலமானது எதிர்கால மனித விண்வெளி வானூர்திகள் மற்றும் விண்வெளி நிலையம் ஆகியவற்றிற்கான தகவல் தொடர்புகளை வழங்குவதற்காக புதிய தலைமுறைக் கண்காணிப்பு மற்றும் தரவு நிலை உணர்த்தி செயற்கைக் கோளை சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.
  • இந்தியாவில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்செவி நிறுவனமானது இந்தியாவில் “Tipline” என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குடிமக்கள் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை சரி பார்க்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்