2017 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த மறைமுக வரியான சரக்கு மற்றும் சேவைகள் வரியின் (Goods and Services Tax - GST) வசூலிப்பானது மார்ச் மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த வரி வசூலிப்பானது 15.6 சதவிகிதம் உயர்ந்து ரூ.1.06 டிரில்லியன் என்ற மதிப்பை எட்டியுள்ளது.
வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, 20 ஆண்டுகள் அதிபர் பதவி வகித்த அப்டெலாசிஸ் பவுட்டெப்லிக்கா என்பவர் தனது பதவியில் இருந்து விலக உள்ளார்.