2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 அன்று சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த மனு சவ்கானி பொறுப்பேற்றார். மேலும் இவர் மான்செஸ்டர் யுனிடெட் நிறுவனத்தின் தணிக்கைக் குழுவின் உறுப்பினர் மற்றும் நிர்வாகப் பணியல்லாத இயக்குநர் ஆகிய பொறுப்புகளிலும் பணியாற்றுகிறார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப் படி, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 01-லிருந்து விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவற்றின் அனைத்துக் கிளைகளும் பேங்க ஆப் பரோடாவின் கிளைகளாக செயல்படுகின்றன.
இணைக்கப்பட்ட இந்த 2 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பேங்க் ஆப் பரோடாவின் வாடிக்கையாளர்களாகக் கருதப்படுவார்கள்.
ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சேவை நிறுவனமானது ஹேப்டிக் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ளது. ஹேப்டிக் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்பது உரையாடல், பேச்சு மற்றும் பிராந்திய மொழிகளில் இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு உதவி நிறுவனத்தைக் கட்டமைப்பதற்கான ஒரு உரையாடும் வசதி கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தளமாகும்.
மியான்மரில் உள்ள சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்ந்த மனித உரிமை விதி மீறல்கள் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவின் தலைவராக அமெரிக்காவின் அரசுத் தரப்பு வழக்குரைஞரான நிக்கோலஸ் கொம்ஜியான் என்பவரை ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அண்ட்டோனியோ குட்டெரஸ் நியமித்துள்ளார்.
கம்பியில்லா செயலெல்லையை வரையறுப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனமான ஓபன் சிக்னலின் அறிக்கையானது இந்தியாவில் மிக அதிகமாக 4G அலைவரிசை கிடைக்கும் நகரமாக தன்பாத்தை (95.3%) அறிவித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ராஞ்சி (95%) உள்ளது.