மார்ச் மாதத்தில் இந்தியாவின் பங்குச் சந்தைக்கு வந்துள்ள வெளிநாட்டு மூலதன வரத்தானது 89 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இந்தியப் பங்குச் சந்தைக்கு வந்த மிகப் பெரிய வெளிநாட்டு மூலதனம் இதுவாகும்.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII - Foreign Institutional Investors) மற்றும் வெளிநாட்டு சேவை முதலீட்டாளர்கள் (FPI - Foreign Portfolio Inevestors) ஆகியவற்றின் முதலீடுகள் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI - Securities and Exchange Board of India) மூலம் ஒழுங்குபடுத்தப் படுகின்றன. இந்த முதலீடுகளின் மீதான உச்ச வரம்பு இந்திய ரிசர்வ் வங்கியினால் பராமரிக்கப்படுகின்றது.
புல்வாமாவில் இந்திய ரிசர்வ் பாதுகாப்புப் படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநில அரசானது 270 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட ஜம்மு-ஸ்ரீநகர் ஊரி தேசிய நெடுஞ்சாலை 1-ல் மக்கள் போக்குவரத்தைத் தடை செய்துள்ளது.
இந்தத் தடையானது காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை வாரத்தில் இரண்டு நாட்களுக்கு செயல்படுத்தப்பட விருக்கின்றது. இத்தடையானது 2019 ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
யூடியூபின் தலைமை நிர்வாக அதிகாரியான சூசன் வோஜ்சிக்கி என்பவர் தனது வருடாந்திரத் தலைமை நிகழ்வான “பிராண்ட்கேஸ்ட்” என்பதில் யூடியூபின் மிகப்பெரிய மற்றும் விரைவான வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளதை உறுதி செய்துள்ளார்.
காம்ஸ்கோர் தரவின்படி, இந்தியாவில் யூடியூபானது 265 மில்லியனுக்கும் மேற்பட்ட மாதாந்திர நிகழ்நேர பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது.