பங்குகளின் மதிப்பில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது மிகப்பெரிய பங்குச் சந்தையாக ஹாங்காங்கின் பங்குச் சந்தை உருவெடுத்துள்ளது. முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் முறையே அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன.
இலண்டனில் நடைபெற்ற சர்வதேசத் தண்ணீர் மாநாட்டின் போது தேசியத் தூய்மை கங்கைத் திட்டம் (National Mission for Clean Ganga - NMCG) அல்லது நமாமி கங்கையானது சர்வதேசத் தண்ணீர் நுண்ணறிவு அமைப்பினால் “ஆண்டின் பொதுத் தண்ணீர் நிறுவனத்திற்கான” சிறப்புத் தகுதிநிலையைப் பெற்றுள்ளது.
மத்திய அரசானது பசு பாதுகாப்பிடங்கள் தொடர்பான விவரங்கள் மற்றும் அதன் நிர்வாகக் கட்டுப்பாடுகள், விலங்குகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுத்தல் மற்றும் அதன் நிர்வாக ரீதியிலான சட்டங்கள் ஆகியவற்றை சுற்றுச் சூழல் அமைச்சகத்திலிருந்து வேளாண் அமைச்சகத்திற்கு மாற்றியுள்ளது.