2019 ஆம் ஆண்டு அக்டோபர் 31 வரை பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நீட்டிக்க ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ஒப்புக் கொண்டுள்ளன. இந்த நீட்டிப்பானது நெகிழ்வுத் தன்மையுடையது. வெளியேறுவதற்கான ஒப்பந்தமானது ஐக்கிய இராஜ்ஜியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பிரிட்டன் வெளியேற முடியும்.
வாகனத் துறை மற்றும் உயர்ரக மின் எஃகு ஆகியவற்றிற்கான மதிப்புக் கூட்டப்பட்ட எஃகின் அதிக இறக்குமதி காரணமாக மூன்று ஆண்டுகளில் முதன்முறையாக 2018-19 ஆம் நிதியாண்டில் எஃகின் நிகர இறக்குமதியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது.
பாலஸ்தீனியத்தின் அதிபரான முகமது அபாஸ் என்பவர் முகம்மது இஸ்தாயேக் என்பவரை அந்நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளார். இவர் அபாஸிற்கு நீண்டகால ஆலோசகராகவும் அவரின் பதேக் கட்சியில் மூத்த உறுப்பினராகவும் இருக்கிறார்.