TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 15 , 2019 1924 days 569 0
  • கடலோரப் பிராந்தியங்களில் உள்ள சிறிய சதுப்புநிலப் பகுதிகளை கண்டறிந்து அவற்றைப் படமெடுத்து உறுதி செய்யவும் கடலோர வாழ்வாதாரத் திட்டங்களின் மூலமாக அவற்றைப் பாதுகாக்கவும் முதன்முறையாக இஸ்ரோவானது மத்தியக் கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
    • இது காலநிலை மாற்றங்களின் விளைவுகளுக்கு எதிராக ஒரு வலுவான கட்டமைப்பை அமைப்பதற்காக இணைந்துள்ளது.
  • லக்னோவின் கிறிஸ்தவ சபைக் கல்லூரியானது 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தங்களது மாணவர்களின் பெற்றோர்கள் வாக்களிக்கும் பட்சத்தில் அவர்களின் இறுதித்தேர்வில் பத்து மதிப்பெண்கள் கூடுதலாகச் சேர்க்கப்படும் என அறிவித்துள்ளது.
  • அரசியலமைப்பு சபையில் டாக்டர். பீமாராவ் அம்பேத்கரின் உரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் கையேட்டைப் பிரசார் பாரதியின் தலைவரான சூர்யப் பிரகாஷ் புதுடெல்லியில் வெளியிட்டார்.
  • இந்தியக் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தின் பொலிவியா நாட்டுப் பயணத்தின் போது அந்நாடானது சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டிணைவில் 122-வது உறுப்பினராவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
  • கூகுள் நிறுவனமானது எந்த இடத்திலிருந்தும் செயலிகளை இயக்கவும் நிர்வகிக்கவும் வசதியாக ‘அந்தோஸ்’ எனும் புதிய கிளவுட் அடிப்படையிலான திறந்தநிலை தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • அந்தோஸ் ஆனது பொது கிளவுடில் அல்லது ஏற்கனவே வன்பொருளில் நிறுவப்பட்டுள்ள செயலிகளை இயக்க பயனாளிகளுக்கு அனுமதியளிக்கிறது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயின் அமீரக இஸ்லாமிய வங்கியானது கட்செவி (WhatsApp) வழியாக வாடிக்கையாளர்களுக்கு உரையாடல் வங்கிச் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இதன் மூலம் கட்செவி வழியாக வங்கிச் சேவையைத் தொடங்கிய முதல் இஸ்லாமிய வங்கியாக இது மாறவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்