புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய இரயில்வே நிலையமானது உலகின் மிக நீளமான இரயில் நிலையத்தின் பெயர் என்ற சிறப்புத்துவத்தை ஒரு எழுத்தின் முலம் இழந்துள்ளது.
ஐக்கிய இராஜ்ஜியத்தின் வேல்ஸில் உள்ள இரயில் நிலையமானது “LlanFairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch” என்ற பெயரால் வழங்கப்படுகிறது. உலகச் சாதனைப் பெற்ற இந்த இரயில் நிலையத்தின் பெயரானது 58 எழுத்துகளைக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவிருக்கும் அபுதாபி சர்வதேச புத்தகத் திருவிழாவின் போது (ADIBF - Abu Dhabi International Book Fair) “நன்மதிப்பு விருந்தாளி” நாடாக இந்தியா கலந்து கொள்ளும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. ADIBF ஆனது 1981 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
போர்ப்ஸின் உலகின் சிறந்த வங்கிக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் வாடிக்கையாளர்களால் முன்னணி வங்கியாக எச்டிஎப்சி வங்கி கண்டறியப்பட்டுள்ளது. போர்ப்ஸ் நாளிதழானது 23 நாடுகளில் ஆய்வை நடத்தியது. இந்தத் தரவரிசையில் ஐசிஐசிஐ வங்கியானது இரண்டாம் இடத்திலும் எஸ்பிஐ வங்கியானது 11-வது இடத்திலும் உள்ளது.
ஆண்டின் தலைசிறந்த பொதுத் துறை நிறுவனத்திற்கான புகழ்பெற்ற “2019 ஆம் ஆண்டின் AIMA (The All India Management Association - AIMA) மேலாண் இந்திய விருதை” இந்திய எண்ணெய்க் கழகம் பெற்றுள்ளது. அனைத்து இந்திய மேலாண்மைக் கழகமானது நாட்டில் மேலாண்மை தொழிற் பண்பட்டவர்களுக்கான தலைமை அமைப்பாகும்.