செசெல்ஸ் போன்ற தீவு நாடுகளால் எதிர்கொள்ளப்படும் உலக வெப்பமயமாதலின் உடனடிப் பாதிப்புகளை எடுத்துக் காட்டுவதற்காக கடற்கரையின் ஆழமானப் பகுதியிலிருந்து அந்நாட்டின் அதிபரான டேனி பாரே உரை நிகழ்த்தினார்.
பிரிட்டன் நடத்திய “நெக்டோன் திட்டம்” என்ற அறிவியல் பயணத்திற்காக அவர் சென்ற போது இந்த உரை நிகழ்த்தப்பட்டது. இந்தத் திட்டமானது இந்தியக் கடற்பகுதியின் ஆழம் குறித்து ஆய்வு நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டின் ஆசிய-பசிபிக் நெகிழ்திறன் நகரங்கள் காங்கிரஸின் (Resilient Cities Asia-Pacific 2019 - RCAP) 4-வது பதிப்பானது உள்ளூர் சுற்றுச் சூழல் முன்னெடுப்புகளுக்கான சர்வதேச மன்றத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது (ICLEI - International Council for Local Environmental Initiatives). இது தெற்கு தில்லி நகராட்சிக் கழகத்தினால் புது தில்லியில் நடத்தப்பட்டது.
அமெரிக்காவை மையமாகக் கொண்ட நோயின் போக்கு, பொருளாதாரம் மற்றும் கொள்கைகளுக்கான மையத்தினால் (CDDEP - Center for Disease Dynamics, Economics & Policy) நடத்தப்பட்ட இந்தியர்களின் சுகாதார நலம் குறித்த ஒரு ஆய்வின் படி, இந்தியாவில் 6,00,000 மருத்துவர்கள் மற்றும் 20,00,000 செவிலியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மூன்று நபர்களின் டிஎன்ஏவைப் பயன்படுத்தி ஒரு குழந்தை பிறந்துள்ளதாக கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆண் குழந்தையானது இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோரிடமிருந்து மரபணுவைப் பெற்றுள்ளது.
ஏப்ரல் 13 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப் பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்ற ஒரு விழாவின் போது இந்தியக் கடற்படைக் கப்பலான கோழிக்கோடு பணியிலிருந்து விலக்கப்பட்டது.
கண்ணம்மா திட்டம் என்பது மாணவிகளுக்கு சுகாதாரத் துணிகளை வழங்குதற்கான வட மதராஸ் ரோட்டரி சங்கத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.
இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் விமானப் படைத் தளபதியான அர்ஜன் சிங் என்பவரின் 100-வது பிறந்த தினத்தின் போது அவரை நினைவு கூர்ந்தார்.
அர்ஜன் சிங் என்பவர் (15.04.19 – 16.07.19) 5 நட்சத்திரத் தரவரிசையைப் பெற்று இந்திய விமானப் படையின் படைத் தளபதியாக பதவி உயர்வு பெற்ற IAF ன் (Indian Air Force) முதலாவது மற்றும் ஒரே அதிகாரி ஆவார்.