TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 23 , 2019 1916 days 588 0
  • பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறைகள் மீதான அறிவியல்சார் ஆராய்ச்சி மற்றும் கல்வியை ஊக்குவிப்பதற்காக மத்திய ஆயுஷ் அமைச்சகமானது அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்துடன் (CSIR - Council of Scientific and Industrial Research) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • ஆசியாவின் முதலாவது பலூன் செயற்கைக் கோளானது தஞ்சாவூரில் உள்ள பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த மாணவிகளின் குழுவினால் ஏவப்பட்டது.
    • இந்தச் செயற்கைக் கோளானது எஸ்கேஐ என்எஸ்எல்வி 9 (விண்வெளி ஏவு வாகனத்தைப் போன்றது) மணியம்மையார் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • சமீபத்தில் நார்த்ரோப் குருமானால் வடிவமைக்கப்பட்ட அன்டாரிஸ் ஏவு வாகனமானது விர்ஜினியாவில் உள்ள நாசாவின் விண்வெளி ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு “சிக்னஸ் சரக்கு விண்கலத்தைச்” சுமந்து சென்றது.
    • இந்த சிக்னஸில் உள்ள 20 எலிகள் அறிவியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப் படவிருக்கின்றது. இதன் நோக்கம் இழுப்பு வாத நோய்த் தடுப்பு மருந்தின் திறன் குறித்து சோதனை செய்வதாகும்.
  • மதராஸ் உயர் நீதிமன்றமானது இந்துத் திருமணச் சட்டத்தின்படி, “மணமகள்” என்ற சொல்லானது மாற்றுப் பாலினத்தவரையும் குறிக்கும் என்றும் ஒரு பெண்ணாகப் பிறந்தவர்களை மட்டுமே அந்தச் சொல் குறிக்காது என்றும் கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்