TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 24 , 2019 1915 days 545 0
  • ஆப்பிரிக்க நாடான மலாவியானது மாஸ்குயிரிக்ஸ் எனும் வணிகப் பெயரின் கீழ் உலகின் மிகவும் மேம்படுத்தப்பட்ட மலேரியத் தடுப்பூசிக்காக பெரிய அளவில் முன்னோட்ட சோதனைகளை செய்ய உள்ளது.
    • தடுப்பூசியின் 4 அடுத்தடுத்த வழங்கீடுகளானது செயல்புரிவதற்கு, முறையான கால அளவில் வழங்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும்.
  • வங்காள தேசத்தின் தேர்தல் ஆணையமானது அந்நாட்டின் உள்ளாட்சி தேர்தல்களை உயர் தொழில்நுட்ப மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளது.
  • மத்திய சுகாதார அமைச்சகமானது ‘கெமிஸ்ட்’ (chemist) மற்றும் ‘ட்ரக்கிஸ்ட்’ (druggist) எனும் சொற்களை ‘பார்மஸி’ (pharmacy) எனும் வார்த்தையைக் கொண்டு மாற்றுவதாக முடிவெடுத்துள்ளது.
    • இது மருத்துவப் பொருட்களை விற்கும் கடைகளை பார்மஸி எனப் பெயரிடும் சர்வதேச நடைமுறைகளுடன் ஒத்திசைகிறது.
  • பள்ளிப் பருவத்திலிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 வயது சிறுவனான ரன்வீர் சிங்க் சாந்து ஒரு கணக்கியல் நிறுவனத்தை அமைத்து பிரிட்டனின் இளம் வயது கணக்கராகப் புகழ்பெற்றுள்ளார்.
  • பெருவின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா ஒடேப்ரேசிட் முறைகேட்டில் சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்