இந்தியாவுடனான அரசியல் உறவுகளைத் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவு கூறும் வகையில் ராமாயணத்தின் கருத்துருவில் இந்தோனேசியாவானது சிறப்பு நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளது.
இந்த தபால் தலையானது, காகாவின் ராமாயணத்தில் (Kakawin Ramayana) சீதாவைக் காப்பாற்ற ஜடாயு போராடிய ஒரு காட்சியைக் கொண்டுள்ளது.
ஸ்டார்ட்அப்பிலிங் (StartupBlink) எனும் அமைப்பு தொழில் தொடங்குதலுக்கு உகந்த சூழல்களுடைய நாடுகளைத் தரவரிசைப்படுத்தியுள்ளது
மொத்தமுள்ள 120 நாடுகளில் இந்தியா 17-வது இடத்தில் உள்ளது.
போலியான, தரக்குறைவான , காலாவதியான மருந்துகளைக் கட்டுப்படுத்துவதற்காக மருந்துகளின் பெயர்கள் மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை ஆங்கில மொழியுடன் இந்தி / பிராந்திய மொழியையும் சேர்த்து அச்சடிக்க வேண்டும் என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அவற்றின் அமைச்சகங்கள் வழங்கியுள்ள அரசு உத்திரவாதங்களை மீளாய்வு செய்யுமாறு அனைத்து துறைகளையும் நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கான “நீடித்த வளர்ச்சிக்கான நிதியளித்தல்” (Financing for Sustainable Development Report-FSDR) அறிக்கையின்படி, 2030 ஆம் ஆண்டின் நீடித்த வளர்ச்சி செயல்பாட்டின் இலக்கை அடைவதற்கு போதுமான வளங்களை திரட்டுதல் என்பது உலகளாவிய அளவில் ஒரு முக்கிய சவாலாக தொடர்கிறது.
ஜெயராம் என்பவரால் இயக்கப்பட்ட “பயானகம்” (Bhayanakam) (பயம்) எனும் மலையாள திரைப்படமானது பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதினைப் பெற்றுள்ளது.