TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 27 , 2019 1912 days 558 0
  • இந்தியத் தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி S A போப்டே, நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை இந்திய உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 அன்று “ஆய்வகங்களில் உள்ள விலங்குகளுக்கான உலக தினம்” அனுசரிக்கப்படுகின்றது.
  • ஆட்சி மாற்றத்திற்காக சூடான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளில் மக்களால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற போராட்டமானது அரபு புரட்சி 2.0 என்று அழைக்கப்படுகின்றது.
  • “எதிர்காலப் பணிகளில் முக்கியமானது பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் - 100 ஆண்டுகள் அனுபவம் மீதான கட்டமைப்பு” என்ற தலைப்பைக் கொண்ட ஒரு அறிக்கையானது 1919 ஆம் ஆண்டிற்குப் பின் நிகழ்ந்த “உலகின் முக்கியமான தொழிற்சாலை விபத்துகளில்” ஒன்றாக போபால் விபத்தைக் குறிப்பிட்டுள்ளது.
    • இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகளின் தொழிலாளர் நிறுவனமான சர்வதேசத் தொழிலாளர் அமைப்பால் (ILO - International Labour Organization) வெளியிடப்பட்டது.
  • மலாவி நாட்டின் புதிய மலேரிய நோய்த் தடுப்பு மருந்தானது RTS, S என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்திய உச்ச நீதிமன்றமானது இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வு செய்த வங்கிகளுக்கான தனது வருடாந்திர ஆய்வு அறிக்கையை, சட்டத்தால் விலக்கு அளிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதனை வெளியிட வேண்டும் என்று அந்த அமைப்பை அறிவுறுத்தியுள்ளது.
  • இந்தியாவின் புகழ்பெற்ற குழிப் பந்தாட்ட நிர்வாகியான திலீப் தாமஸ் என்பவர் இந்தியக் குழிப் பந்தாட்ட தொழிலக மன்றத்தினால் (Golf Industry Association - GIA) “குழிப் பந்தாட்டத்திற்கான வாழ்நாள் பங்களிப்பாளர்” என்ற விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்