இந்தியத் தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி S A போப்டே, நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை இந்திய உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 அன்று “ஆய்வகங்களில் உள்ள விலங்குகளுக்கான உலக தினம்” அனுசரிக்கப்படுகின்றது.
ஆட்சி மாற்றத்திற்காக சூடான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளில் மக்களால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற போராட்டமானது அரபு புரட்சி 2.0 என்று அழைக்கப்படுகின்றது.
“எதிர்காலப் பணிகளில் முக்கியமானது பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் - 100 ஆண்டுகள் அனுபவம் மீதான கட்டமைப்பு” என்ற தலைப்பைக் கொண்ட ஒரு அறிக்கையானது 1919 ஆம் ஆண்டிற்குப் பின் நிகழ்ந்த “உலகின் முக்கியமான தொழிற்சாலை விபத்துகளில்” ஒன்றாக போபால் விபத்தைக் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகளின் தொழிலாளர் நிறுவனமான சர்வதேசத் தொழிலாளர் அமைப்பால் (ILO - International Labour Organization) வெளியிடப்பட்டது.
மலாவி நாட்டின் புதிய மலேரிய நோய்த் தடுப்பு மருந்தானது RTS, S என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றமானது இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வு செய்த வங்கிகளுக்கான தனது வருடாந்திர ஆய்வு அறிக்கையை, சட்டத்தால் விலக்கு அளிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதனை வெளியிட வேண்டும் என்று அந்த அமைப்பை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற குழிப் பந்தாட்ட நிர்வாகியான திலீப் தாமஸ் என்பவர் இந்தியக் குழிப் பந்தாட்ட தொழிலக மன்றத்தினால் (Golf Industry Association - GIA) “குழிப் பந்தாட்டத்திற்கான வாழ்நாள் பங்களிப்பாளர்” என்ற விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.