முதன்முறையாக ஐக்கிய அரபு அமீரகமானது இந்தியாவைச் சேர்ந்த இந்துத் தந்தை மற்றும் முஸ்லீம் தாய்க்குப் பிறந்த 9 மாதங்கள் நிரம்பிய ஒரு பெண் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழை வழங்கியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகமானது ஒரு சகிப்புத் தன்மை உடைய நாட்டிற்கான உதாரணமாகத் தான் திகழ்வதை எடுத்துக் காட்டுவதற்காக 2019 ஆம் ஆண்டை “சகிப்புத் தன்மைக்கான ஆண்டாக” அறிவித்துள்ளது.
கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் துறை ஆராய்ச்சியாளர்கள் உதடுகள், தாடை மற்றும் நாக்கு ஆகியவற்றுடன் கூடிய மெய்நிகர் குரல் வளையப் பாதையை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் மூளையின் சமிக்ஞைகளைப் பயன்படுத்தி இயற்கையான குரலைப் போன்று செயற்கையான குரலை ஏற்படுத்த முடியும்.
இது விபத்துகள், பக்க வாதம் அல்லது நரம்பு சார்ந்த குறைபாடுகள் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டு பேச முடியாமல் இருப்பவர்களுக்கு உதவ இருக்கின்றது.
இரண்டு போட்டிகளைக் கொண்ட ஐசிசி உலக கிரிக்கெட் லீக் பிரிவின் ஆண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பங்கு பெறும் முதலாவது பெண் நடுவராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளைரி போலோசாக் உருவெடுத்துள்ளார்.
தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக பெய்ஜிங்கில் நடைபெற்ற மண்டலம் மற்றும் பாதை வழித்தட மன்ற (Belt and Road Forum) மாநாட்டை இரண்டாவது முறையாக இந்தியா தவிர்த்துள்ளது.
மண்டலம் மற்றும் பாதை வழித்தடத் திட்டத்தின் முக்கியக் கூறான சீன-பாகிஸ்தான் பொருளாதார பெருவழிப் பாதைக்கு (China-Pakistan Economic Corridor - CPEC) எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது.
இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமை கட்டமைப்பில் “போதிய அளவிடத் தகுந்த முன்னேற்றங்கள்” ஏற்படாத காரணத்தினால் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் (USTR - The US Trade Representatives) இந்தியாவை “முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியல்” இல் வைத்துள்ளனர்.
தனது சொந்தச் சட்டமான “பிரிவு 301 அறிக்கை” அல்லது உலக வர்த்தக அமைப்பின் வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்துகின்றது.
கேரளாவின் விழிஞ்சியம் துறைமுகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் “எல் அண்ட் டி” என்ற நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட “ICGS C-441” என்ற இடைமறிப்புக் கப்பலானது இந்தியக் கடற்படைப் பாதுகாப்புப் பணியில் இணைந்தது. இது உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்டக் கப்பலாகும்.