TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 29 , 2019 1910 days 584 0
  • மும்பையில் நடைபெற்ற விழாவில் பிரபல எழுத்தாளரான சலீம் கான், தேசிய விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான மதூர் பண்டார்கர் மற்றும் நடிகை ஹெலன் ஆகியோருக்குப் புகழ்மிக்க மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப்பட்டது.
  • தவறுதலாக விபத்தில் சிக்கிய கோழிக் குஞ்சினைக் காப்பாற்றியதற்காக மிசோரமைச் சேர்ந்த தேராக் சி லால்ச்சன்ஹிமாவிற்கு விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் அமைப்பானது (PETA - People for the Ethical Treatment of Animals) ‘2019 ஆம் ஆண்டிற்கான கருணையுள்ள குழந்தை’ என்ற விருதை அந்த சிறுவனுக்கு வழங்கியுள்ளது.
  • சென்னையில் தமிழ்நாடு விளையாட்டுச் செய்தியாளர்கள் சங்கம் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் ஆகியோர் இணைந்து நடத்திய வருடாந்திர விருதுகள் மற்றும் உதவித் தொகை வழங்கும் விழாவில் பிரபல மேசைப் பந்தாட்ட வீரரான சரத் கமலுக்கு 2019 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் பட்டம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்