அனைத்து மின் வாகனங்களுக்கும், அவற்றை வாங்கப்பட்ட ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், பச்சை நிறத்தாலான எண் தகடுகளைப் பொருத்துவதைக் கட்டாயமாக்குமாறு மத்திய அரசாங்கமானது அனைத்து மாநில அரசுகளின் போக்குவரத்துத் துறைகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் மற்றும் பொருளாதார வல்லுநரான டாக்டர் ரகுராம் ராஜன் “மூன்றாவது தூண் : சந்தைகள் மற்றும் நாடுகள் ஆகியவை சமூகங்களை எவ்வாறு பின்னுக்குத் தள்ளுகின்றன” என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
ஐக்கிய இராஜ்ஜியம் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நெருக்கடி நிலையினை அறிவித்துள்ளது. இத்தகைய நெருக்கடி நிலையினை அறிவிக்கும் முதலாவது தேசிய அரசாங்கம் இதுவாகும்.
இந்த நெருக்கடி நிலையானது அனைத்து அரசாங்கக் கொள்கைகளிலும் பருவ நிலை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதைக் குறிக்கின்றது.
மும்பை பங்குச் சந்தையானது (Bombay Stock Exchange) தனது முதலாவது சுதந்திரமாக செயல்படக்கூடிய இயக்குனராக ஜெயஸ்ரீ வியாஸ் என்பவரை நியமித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் ஒருநாள் அணியில் இங்கிலாந்து அணி முதலிடத்தையும் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தையும் தக்க வைத்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனமானது புல்வாமா பகுதியில் முதன்முதலாக ஒளியியல் மின்னிழையினைப் பயன்படுத்தி அதிவேக அகலக் கற்றை சேவையினை தனது ‘Bharath Fibre’ எனும் திட்டத்தின் மூலமாக வழங்குகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்படுத்தப்பட்ட முதலாவது நேரடி மின்னிழை சேவை (FTTH - fibre-to-the-home) இதுவாகும்.
14-வது வருடாந்திர சீன-இந்திய எல்லை வர்த்தகமானது நாதுலா நுழைவு வாயிலின் திறப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. இத்தருணத்தில் எல்லைப் பகுதியில் உள்ள இந்திய மற்றும் சீன அதிகாரிகள் சால்வைகளைப் பரிமாறிக் கொண்டனர்.
சீன வர்த்தகர்கள் தங்களது பொருட்களை விற்பனை செய்வதற்காக நாதுலா கணவாய்க்கு அருகிலுள்ள இந்தியாவின் ஷெரதாங் பகுதிக்கு வருகின்றனர். இந்திய வர்த்தகர்கள் தங்களது பொருட்களை விற்பனை செய்வதற்காக திபெத் தன்னாட்சி உரிமையுடைய ரிசெங்காங் பகுதிக்கு வருகின்றனர்.
ஸ்ரீவைஷ்ணவ பாரம்பரியத்தைச் சார்ந்த புகழ்பெற்ற தத்துவவியலாளரான “ஸ்ரீ வேதாந்த தேசிகன்” என்பவரின் 750-வது பிறந்த தினத்தின் நினைவாக மே மாதம் 02 ஆம் தேதியன்று இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் தபால் தலை ஒன்றினை வெளியிட்டார்.
இதே நிகழ்ச்சியை 2018 ஆம் ஆண்டு ஜூலை அன்று ஐக்கிய இராஜ்ஜியத்தின் இலண்டன் நகரில் உள்ள பொது அவை வளாகத்தில் பிரிட்டீஷ் பாராளுமன்றவாதிகள் ஒன்றிணைந்து கொண்டாடினர்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காக, முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் மற்றும் டெல்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை ஒன்றிணைந்து இந்தியாவில் கழிவு மேலாண்மையை செயல்படுத்துவதற்காக “கழிவுப் பொருளிலிருந்துப் பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்யப்படும் தொழில்நுட்பத்திற்கான சிறப்புமிகு மையத்தை” (“Centre of Excellence for Waste to Wealth Technologies”) அமைக்கவுள்ளது.
1979 ஆம் ஆண்டு மே 04 அன்று ஐக்கிய இராஜ்ஜியத்தின் முதல் பெண் பிரதமராக மார்கரெட் தாட்சர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.