தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், வணிக மையங்கள், அனைத்து விடுதிகள், பெட்ரோல் நிலையங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள் ஆகியவை 24 மணி நேரமும் செயல்படுவதற்கு அனுமதிப்பதற்காக குஜராத் விற்பனைக் கூடங்கள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம், 1948 ஆனது திருத்தப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியானது ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை சரியாகக் கடைபிடிக்காமல் இருந்தமைக்காக வோடபோன் எம்.பேசா, வெஸ்டர்ன் யூனியன், மணி கிராம் உள்பட முன்பண பணவழங்கீட்டு சேவைகளை வழங்கும் 5 நிறுவனங்கள் மீது அபராதங்களை விதித்துள்ளது.
தேசியத் திறந்தவெளிப் பள்ளி நிறுவனமானது (National Institute of Open Schooling - NIOS) கற்பவர்களுக்கு துணை மருத்துவ பாடப் பிரிவுகளில் “திறன் கல்வியைப்” பயிற்றுவிப்பதற்காக இந்திய மருத்துவ கூட்டமைப்புடன் (Indian Medical Association) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
NIOS ஆனது உயர்நிலை, மேல்நிலை மற்றும் தொழில் துறைப் பிரிவுகளில் 2.7 மில்லியன் மாணவ / மாணவிகளைக் கொண்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய திறந்தவெளி கல்வி அமைப்பாக விளங்குகின்றது.