ஒருங்கிணைந்த வாழ்வாதார மதிப்பீட்டிற்கான பசுமை மதிப்பீட்டு ஆணையமானது (Green Rating for Integrated Habitat Assessment - GRIHA) இந்தியா முழுவதும் தற்பொழுதுள்ள பள்ளிகளின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதற்காக “தற்பொழுதுள்ள பள்ளிகளுக்கான GRIHA” என்ற ஒரு தர நிர்ணயக் குறியீட்டைத் தொடங்கியுள்ளது.
இது சுற்றுச்சூழல் மீதான தங்கள் பள்ளிகளின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வியறிவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வட கொரியாவின் அதிபரான கிம் ஜாங் - உன் தலைமையின் கீழ் அந்நாடு பல்வேறு குறைந்த வரம்புள்ள ஏவுகணைகளை ஜப்பான் கடற்பகுதிக்குள் ஏவியுள்ளது.
மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அழுத்தத்தைப் போக்கும் செர்ரோடோனின் (வேதியியல் பெயர் : 5 – ஹைட்ராக்ஸிட்ரைட்டமைன்) ஒரு புதிய செயல்பாட்டைக் கண்டறிந்துள்ளனர்.
இது நரம்பியல்சார் நோய்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு உதவும்.
முதன்முறையாக, ரவீந்திரநாத் தாகூரின் அரிதான எண்ணெய் ஓவியங்களில் ஒன்றான “மேக்பெத்திலிருந்து மூன்று மந்திரவாதிகள்” என்ற ஒரு ஓவியம் கல்கத்தாவில் உள்ள இரவீந்திர பாரதி பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் உள்ள அபநிந்திரநாத் தாகூர் அரங்கத்தில் காட்சிப்படுத்தப் படவிருக்கின்றது.
இந்தப் பார்வையிடக்கூடிய ஓவியச் சேமிப்பு அரங்கமானது இரவீந்திரநாத் தாகூரின் 158-வது பிறந்த தினக் கொண்டாட்டத்தின் போது திறக்கப்பட இருக்கின்றது.
ஏப்ரல் 17 அன்று, ஏறத்தாழ 192.8 மில்லியன் தகுதி வாய்ந்த வாக்காளர்களுடன் எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் இந்தோனேசியா தனது அதிபர் மற்றும் சட்ட சபைத் தேர்தல்களை நடத்தியது.
இந்தோனேசியாவின் தேசியத் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி, தேர்தலை நடத்தியதற்கு உதவியதால் ஏற்பட்ட பணிச் சுமையின் காரணமாக 311 தேர்தல் அதிகாரிகள் இறந்துள்ளனர் என்றும் 2232 மக்கள் உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் பனாமாவில் நடைபெற்ற தேர்தலில், அந்நாட்டு மக்கள் ஜனநாயகப் புரட்சிகர மாற்றம் என்ற கட்சியின் வேட்பாளரான “லாரன்டினோ கோர்டிசோ” என்பவரை தங்களது அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
ரோஹிங்யா பிரச்சனை குறித்து செய்தி வெளியிட்டதற்காக 500 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்த ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையைச் சேர்ந்த 2 மியான்மர் பத்திரிக்கையாளர்களான வா லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.