TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 16 , 2019 1893 days 619 0
  • இந்திய சமூக அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (Indian Council of Social Science Research - ICSSR) பொன்விழாக் கொண்டாட்டங்களை இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தொடங்கி வைத்தார். மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனம் 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
    • ICSSR நிறுவனம் இந்தியாவில் சமூக அறிவியலில் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக திட்டங்கள், சமூகங்களின் உறுப்பினர்கள், சர்வதேசக் கூட்டுச் செயல்பாடு, திறன் கட்டமைப்பு, ஆய்வுகள், வெளியீடுகள் ஆகியவற்றிற்காக நிதி உதவிகளை அளிக்கின்றது.
  • மே 15 முதல் 22 வரை ஆசிய நாடுகளுக்கிடையே கலாச்சாரப் பகிர்மானங்களை ஊக்குவிப்பதற்காக ஆசிய நாகரிகங்களின் பகிர்மானங்கள் மீதான கருத்தரங்கை சீனா பெய்ஜிங்கில் நடத்துகின்றது.
    • இந்தக் கருத்தரங்கின் கருத்துருவானது, “எதிர்காலப் பகிர்மானத்துடன் கூடிய ஒரு சமூகம் மற்றும் ஆசிய நாகரீகங்களுக்கிடையேயான பரஸ்பர கல்வி மற்றும் பரிமாற்றம்” என்பதாகும். இது ஆசியத் தீர்வுகளானது அதன் மக்களுக்குப் பயன்படுவதையும் ஆசிய அறிவானது அரசியல் வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் ஒப்புக் கொள்கின்றது.
  • மாஹி என்ற குறைவான எடை கொண்ட (LSA - Light Sports Aircraft) விளையாட்டுப் போட்டிகளுக்கான விமானத்தில் தனி நபராக அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த உலகின் முதலாவது பெண்மணியாக இந்தியாவைச் சேர்ந்த படைத் தலைவரான ஆரோகி பண்டிட் உருவெடுத்துள்ளார்.
    • இந்தச் சாதனையானது இவரின் தற்போதைய “பெண்களுக்கான அதிகாரமளிப்புப் பயணத்தின்” ஒரு பகுதியாகும். LSA ஆனது 400 கிலோ கிராம் எடை, ஒற்றை என்ஜின், மிகக் குறைந்த எடை கொண்ட இயந்திரம் ஆகிய அம்சங்களைக் கொண்டது. இந்த விமானம் ஸ்லோவேனியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.
  • மாஹி இந்திய விமானப் போக்குவரத்துப் பொது இயக்குனரகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதலாவது LSA ஆகும்.
  • இந்திய அரசு அனைத்து கடைகளிலும் ஒருங்கிணைந்த பண வழங்கீடுகள் இடைமுகத்தை (UPI - Unified Payments Interface) பயன்படுத்தி விரைவு பதிலெதிர்ப்பு குறியீடு அடிப்படையிலான பண வழங்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
  • நேபாளத்தைச் சேர்ந்த 49 வயதாகிய முன்னாள் ஷெர்பாவான (பிரதிநிதி) “காமி ரீட்டா” என்பவர் இமயமலையை 23-வது முறையாக அடைந்து உலக சாதனை படைத்துள்ளார்.
    • 2018 ஆம் ஆண்டில் 22-வது முறையாக இமய மலையை அடைந்த சாதனையை இவரே முறியடித்துள்ளார்.
  • இரகசியப் பாதுகாப்பு காரணங்களுக்காக, முக்கியத்துவம் அல்லாத குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் மற்றும் முக்கியக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு காவல் துறை மற்றும் இதர நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் “முக அங்கீகார மென்பொருள்” தடை செய்யப்பட்ட முதலாவது அமெரிக்க நகரமாக சான் பிரான்சிஸ்கோ உருவெடுத்துள்ளது.
  • சீனா, தனது நாட்டில் நிகழ்நேர (ஆன்லைன்) கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியா வலைதளத்தின் அனைத்து மொழி வடிவங்களையும் அணுகுவதற்குத் தடை விதித்துள்ளதாக விக்கிமீடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
    • 2015 ஆம் ஆண்டு முதல், சீனாவின் “கிரேட் பயர்வால்” (Great Firewall) ஆனது விக்கிப்பீடியாவின் சீன மொழி வடிவத்தை அணுகுவதற்குத் தடை விதித்திருந்தது. நீண்ட காலமாக சீனப் பயன்பாட்டாளர்கள் முகநூல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம் மற்றும் இதர சமூக ஊடகங்களைப் பயன்படுத்தாமல் இருகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்