ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணையத்தின் 1267 தீர்மானம் மூலம் உருவாக்கப்பட்ட அல் கொய்தா தடைவிதிப்புக் குழுவானது ஐஎஸ்ஐஎஸ் கோராசன் மீது தடைகளை விதித்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் - கே என்பது பாகிஸ்தானைச் சேர்ந்தவரால் 2015 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பாகும். இது ஐஎஸ்ஐஸ் அமைப்பின் தெற்கு ஆசியக் கிளை என்றும் அழைக்கப்படுகின்றது.
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் ஒருங்கிணைந்த பகுதியான கேரளாவில் உள்ள வயநாடு வனவிலங்கு சரணாலயமானது (Wayanad Wildlife Sanctuary - WWS) அதிகமான புலிகளைக் கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 176 புலிகளில், 75 புலிகள் WWS-ல் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த உயிர்க்கோள முக்கியப் பகுதியானது கர்நாடகாவில் உள்ள நாகர்கோல், வடகிழக்கில் பந்திப்பூர் மற்றும் தென்கிழக்கில் முதுமலை ஆகிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் வலைப் பின்னலினால் சூழப்பட்டுள்ளது.
இந்திய சிறு தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கியானது (Small Industries Development Bank of India - SIDBI) சிறு தொழில்களுக்கு நிதியளிக்கின்ற மற்றும் வருமானத்தைத் தருகின்ற இதர நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் புதுமைக் கால நிதியியல் தொழில்நுட்ப நிறுவனங்களான வங்கிப் பணி அல்லாத நிதியியல் நிறுவனங்களுக்கு (NBFC - non-banking finance companies) ரூ.10 கோடி வரை நிதியுதவித் தொகையை நீட்டிப்பதற்காக சோதனைத் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
நிதியியல் தொழில்நுட்பம்சார் NBFC-களானது டிஜிட்டல் முறையில் கடனளிக்கும் நிறுவனங்களாகும். இவை நிதித் தொகையினை எளிதான முறையிலும் விரைவாகவும் அணுகுவதற்குத் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
இந்தியத் தலைமைக் கடற்படைத் தளபதியான சுனில் லம்பா இந்தியக் கடற்படையின் முதலாவது முழுமையான தேர்வு வாரியத்தினை (SSB - Service Selection Board) கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள டைமண்ட் ஹார்பரில் தொடங்கி வைத்தார்.
இதன் தொடக்க விழாவில் இந்தியத் துணைக் கடற்படைத் தளபதி கரம்பீர் சிங், தலைமைக் கொடி அதிகாரி, கிழக்கு மண்டலத் தலைமைத் தளபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புவியின் ஆழமான பகுதியான மரியானா அகழியில் வாழும் கடல்சார் உயிரினங்களில் கதிரியக்கக் கார்பன் இருப்பதற்கான தடயங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தக் கதிரியக்கக் கார்பன் 20 ஆம் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட அணு ஆயுதச் சோதனையின் போது வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டதாகும்.
தேசியத் தூய்மை கங்கைத் திட்டம், எச்சிஎல் நிறுவனம் (HCL) மற்றும் இந்தியாவில் தேசியக் கலை மற்றும் கலாச்சாரப் பாரம்பரிய அறக்கட்டளை (Indian National Trust for Art and Culture Heritage - INTACH) ஆகியவை “நமாமி கங்கை” திட்டத்தின் கீழ் உத்தரகாண்டில் ருத்ராக்ச மரங்களை நடுவதற்காக முத்தரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.