TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 29 , 2017 2521 days 875 0
  • ஜிம்பாவேயில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்து வந்த இராபர்ட் முகாபே அதிபர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து ஜிம்பாவேயின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள எம்மர்சன் நங்கக்வா தனக்காக இரு துணை அதிபர் பதவிகளில் நாட்டின் முன்னாள் இராணுவ தளபதியான கான்ஸ்டான்டினோ சிவெங்காவையும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான கெம்போ மொஹாதியையும் நியமித்துள்ளார்.
  • தெலுங்கானா அரசு வருகின்ற ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து தன்னுடைய விவசாய சமூகத்திற்கு 24 மணி நேர இலவச மின் வசதி அளிப்பை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • சீனாவின் மிகப்பெரிய சமூக ஊடகமான We Chat சீனாவின் அதிகாரப்பூர்வ மின்னணு தனி நபர் அடையாள அமைப்பாக (Electronic Personal Information System) உருவெடுக்கவுள்ளது. சீன அரசால் வழங்கப்படும் வழக்கமான அடையாள அட்டைகளைப் போல் இனி இந்த சமூக ஊடகம் செயல்படும்.
  • அஸாம் மாநில அரசு தன்னுடைய 10 AM முதல் 5 PM  வரையிலான அலுவலக வேலை நேரத்தை 9.30 AM to 5 PM என மாற்றியுள்ளது. இப்புதிய நேர அட்டவணை வரவிருக்கும் 2018-ன் ஜனவரி முதல் தேதியிலிருந்து    அமலுக்கு வர உள்ளது.
  • சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக மாநிலம் முழுவதுமுள்ள மருத்துவமனைகளிலும், மகளிர் சிறைச் சாலைகளிலும் கிடைப்பதை உறுதி செய்ய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் சுய உதவிக்குழு “தமிழ்நாடு சானிட்டர் நாப்கின் உற்பத்தியாளர் கூட்டமைப்பை“ உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்