இந்திய ரிசர்வ் வங்கியானது “டிஜிட்டல் முறையில் பணவழங்கீடுகளை ஊக்குவிப்பதற்குப் பரிசீலனைகளை அளிப்பதற்காக” குழு ஒன்றை நியமித்துள்ளது.
இக்குழு நந்தன் நீலேகேனி தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் பண வழங்கீடுகள் மற்றும் தீர்வு அமைப்புகளை ஊக்குவிப்பது மீதான தனது பரிந்துரைகளை இக்குழு சமர்ப்பித்துள்ளது.
மத்திய அரசு மத்திய பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் எம்சிஏ 21 தளத்தில் செயற்கை நுண்ணறிவு அமைப்பை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இது தகவிணக்கத்திற்கான செயல்முறையை எளிதாக்குதல் மற்றும் தன்னியக்க முறையில் வழக்கமான நடைமுறை செயல்கள் 24 மணி நேரமும் நடைபெறுவதை உறுதி செய்தல் ஆகியவற்றிற்காக அறிமுகப்படுத்தப் படவிருக்கின்றது.
2019 ஆம் ஆண்டின் இத்தாலிய ஓபன் இறுதிப் போட்டியில் ரபேல் நடால், நோவாக் ஜோகோவிக்கை வீழ்த்தி 34-வது ATP மாஸ்டர்சின் 1000வது பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். இது அவருடைய ஒன்பதாவது ரோம் பட்டமாகும்.
அமெரிக்காவின் பிரதிநிதிகள் அவையின் சபாநாயகரான நான்சி பெலோசி என்பவர் 2019 ஆம் ஆண்டின் துணிவிற்கான ஜான் எப் கென்னடி சுயவிவர விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை எதிர்த்துத் தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணைகளை தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. விற்பனை செய்யப்படவிருக்கும் இந்த ஏவுகணைகளின் மொத்த மதிப்பானது 600 மில்லியன் டாலர்களுக்கும் மேலானதாகும். வடகொரியாவுடன் அதிகரித்து வரும் பதற்றத்தின் பின்னணியில் இந்த ஏவுகணைகள் விற்பனை செய்யப்படவிருக்கின்றன.
வான்வெளிப் பரப்பில் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக அமெரிக்கக் கப்பல்களினால் பயன்படுத்தப்பட்ட “நிரந்தர ஏவுகணை – 2” (SM-2) என்ற வகையைச் சேர்ந்த 92 ஏவுகணைகளும் “மேம்படுத்தப்பட்ட நடுத்தர வரம்புடைய வானிலிருந்து வானை நோக்கிப் பாயும் ஏவுகணை” என்ற வகையைச் சேர்ந்த 160 வான் எதிர்ப்பு ஏவுகணைகளும் அமெரிக்காவினால் விற்பனை செய்யப்பட்டன.