TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 22 , 2019 2019 days 674 0
  • 1951 ஆம் ஆண்டில் நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் முதலாவது வாக்கைப் பதிவு செய்த இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 102 வயது நிரம்பிய ஷியாம் சரண் நேஹி என்பவர் 2019 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் மண்டி மக்களவைத் தொகுதியில் மீண்டும் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
  • கபில் சர்மா என்பவர் இலண்டனின் உலக புத்தகப் பதிவுகள் என்ற அமைப்பினால் வெளிநாட்டிலும் இந்தியாவிலும் மிகவும் பார்வையிடப்பட்ட மேடைச் சிரிப்புரையாளர் என்று பெயரிடப்பட்டுள்ளார். இவர் பல்வேறு நகைச்சுவைத் தொடர்களின் மூலம் மேடைச் சிரிப்புரையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் “கபிலுடன் நகைச்சுவை இரவுகள்” என்ற தொடரிலிருந்து புகழ் பெற்றார்.
  • இந்தியத் தர நிர்ணயங்கள் அமைப்பினால் (Bureau of Indian Standards - BIS) சான்று அளிக்கப்பட்டால் மட்டுமே புதுப்பிக்கப்பட்ட கைபேசிகளை இறக்குமதி செய்ய அனுமதி அளிப்பதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது.
  • இந்தியாவிற்கான தனது புதிய உயர் ஆணையராக மொய்ன் உல் ஹக் என்ற இராஜாங்க அதிகாரியை பாகிஸ்தான் நியமித்துள்ளது.
  • இலங்கையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரில் ஏறத்தாழ 1,00,000 மக்கள் இறந்தனர். இந்த உள்நாட்டுப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் ஆனதை இலங்கை தற்பொழுது அனுசரித்தது. இருதரப்பினாலும் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் இலங்கையை வலியுறுத்துகின்றது.
  • பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission - UGC) இளைஞர்களை தீவிரவாதத்திலிருந்து விலக்கி வைக்கும் ஒரு நடவடிக்கையாக மே 21 ஆம் தேதியை தீவிரவாத எதிர்ப்புத் தினமாக அனுசரிக்குமாறு பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
    • விவாதங்கள், கலந்தாய்வுகள், கருத்தரங்குகள், உறுதிமொழி ஏற்கும் நிகழ்வுகள், திரைப்படங்களைக் காட்சிப்படுத்துதல் ஆகியவை இந்த நாளில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த நாள் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் இறந்த தினத்தைக் குறிக்கின்றது.
  • முகநூல் நிறுவனம் இந்தியத் தேர்தல்களின் போது தவறான தகவல்கள் பரவுதலைக் குறைப்பதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் முறையிலான அங்கீகாரக் கருவிகள் (Artificial Intelligence and Machine Learning - AIML) ஆகியவற்றைப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளது.
    • தற்பொழுது AIML கருவிகளானது தவறானவை, அவமதித்தல், தளத்தின் விதிமுறையை மீறுதல் ஆகிய காரணங்களுக்காக ஒரு நாளைக்கு மில்லியனுக்கும் அதிகமான முகநூல் கணக்குகளை நீக்க அல்லது தடை செய்ய அந்த நிறுவனத்திற்கு உதவுகின்றது.
  • 46 நாட்கள் நடைபெறும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் போட்டித் தொடரின் 2019 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பைத் தொடரானது மே மாதம் 30 ஆம் தேதியிலிருந்து ஐக்கிய இராஜ்ஜியத்தின் 11 இடங்களில் நடைபெறவிருக்கின்றது.
    • உலகக் கோப்பையில் வெற்றி பெறும் அணி பணமாக சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பரிசுத் தொகையாக (சுமார் 28 கோடி ரூபாய்கள்) பெறும். போட்டித் தொடரின் வரலாற்றில் அதிகமான பரிசுத் தொகை அளிக்கப்படுவது இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்