TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 23 , 2019 2018 days 743 0
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டம் இதே வகையில் முதலாவதான குர் மகா உற்சவத்தை (வெல்லத் திருவிழா/ Jaggery Festival) நடத்திக் கொண்டிருக்கின்றது.
    • ஆசியாவில் வெல்லத்திற்கான மிகப்பெரிய சந்தையாக முசாபர்நகர் விளங்குகின்றது. இங்கு விவசாயிகள் ஏறத்தாழ 60 வகையான வெல்லங்களை உற்பத்தி செய்கின்றனர்.
  • “உலக பொருளாதார நிலைமைகள் மற்றும் வாய்ப்புகள்” (WESP - World Economic Situation and Prospects) என்ற அறிக்கையின்படி 2019 ஆம் ஆண்டின் அரையாண்டின்படி வலிமையான உள்நாட்டு நுகர்வுகள் மற்றும் முதலீடுகள் காரணமாக 2020 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.1 சதவிகிதமாக வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    • WESP என்பது ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை, வர்த்தகம் & வளர்ச்சி மீதான ஐ.நா. கருத்தரங்கு (UN Conference on Trade and Development - UNCTAD) மற்றும் ஐ.நாவின் 5 பிராந்திய ஆணையங்கள் ஆகியவை இணைந்து வெளியிடும் ஒரு அறிக்கையாகும்.
  • இந்தியப் போட்டி ஆணையம் (CCI - Competition Commission of India), தனது வருடாந்திர தினத்தை 2019 ஆம் ஆண்டு மே 20 அன்று அனுசரித்தது. CCI மத்திய அரசினால் நியமிக்கப்பட்டுள்ள 6 உறுப்பினர்கள் மற்றும் 1 தலைவரைக் கொண்டு செயல்படுகின்றது.
    • CCI ஆனது போட்டிச் சட்டம், 2002-ன் விதிமுறைகளின்படி உருவாக்கப்பட்ட ஒரு சட்டப் பூர்வ அமைப்பாகும். இது 2003 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHRC - United Nations Human Rights Council) அறிக்கை குறித்து HRC-ன் சிறப்புக் குழுவினருடன் எந்தவிதத் தகவல் தொடர்பும் இந்தியா வைத்துக் கொள்ளாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்திடம் இந்தியா தெரிவித்துள்ளது.
    • மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் (Office of the High Commissioner of Human Rights - OHCHR) 2018 ஆம் ஆண்டின் ஜுன் மாத அறிக்கையானது ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றங்களைக் களைவதற்காக இந்தியாவினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விசாரித்துள்ளது.
  • மூன்று முறை பார்முலா 1 உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரும் புகழ்பெற்ற கார் பந்தய வீரருமான நிக்கி லௌடா என்பவர் ஆஸ்திரியாவின் வியன்னாவில் காலமானார். அவருடைய வயது 70.
    • இவர் 1976 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜெர்மன் கிரான்ட் பிரிக்ஸின் மத்தியில் நிகழ்ந்த தீக்காயங்களால் பாதிக்கப்பட்டார். இருப்பினும் விபத்தின்போது ஏற்பட்ட தீக்காயங்களில் இருந்து மீண்டு வந்து திரும்பவும் போட்டியில் கலந்து கொண்ட இவருடைய எதிர்த்துப் போராடும் குணத்திற்காக இவர் நினைவு கூறப்படுகின்றார்.
  • உலகெங்கிலும் உள்ள செல்வாக்குள்ள தனி நபர்கள் மற்றும் தனித்துவம் வாய்ந்த திறமையாளர்களை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக “தங்க அட்டை” என்ற நிரந்தர வசிப்பிடத் திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
    • தங்க அட்டைத் திட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீது அல்-மக்கோட்டும் என்பவரால் தொடங்கப்பட்டது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த ஜொஹிந்தர் சிங் சலாரியா என்பவரால் நிர்வகிக்கப்படும் ஒரு அறக்கட்டளையான “பிசிடி மனிதநேயம்” என்ற அமைப்பு “பசி நிவாரணத் தொகுப்பின் ஒரு நீண்ட வரிசை” என்பதை ஏற்படுத்தியதற்காக ஒரு புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
    • முஸ்லீம்களின் புனிதமான ரம்சான் மாதத்தின் போது பசி நிவாரண முயற்சிகளுக்காக இந்த கருணை உதவி நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்