உயிரித் தொழில்நுட்பத் துறை (Department of Biotechnology - DBT) மற்றும் அணு ஆற்றல் துறை (Department of Atomic Energy - DAE) ஆகியவை புற்றுநோய்த் துறையில் இணைப்புக் கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களை ஆதரிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
DAE ஆனது, அதன் டாட்டா நினைவு மையத்தினால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டது. இது இந்தியாவில் தேசியப் புற்றுநோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் சார்பில் ஓர் ஒருங்கிணைப்பு மையமாகவும் செயல்படுகின்றது.
ஜெப் பெசோஸ் தலைமையிலான அமேசான் நிறுவனம் “ஒதுக்கப்பட்ட பெயர்கள் மற்றும் எண்களுக்கான இணையக் கழகத்தில்” (ICANN - Internet Corporation for Assigned Names and Numbers) ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற “ .amazon ” என்ற வலைதள பெயரைப் பெறும் பிரச்சனையில் வெற்றி பெற்றுள்ளது.
உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை நிறுவனமான இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI - Food Safety and Standards Authority of India) வருடாந்திர விற்பனையாக ரூ.12 இலட்சத்திற்கும் மேல் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் சிறு கரிம உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை சான்றிதழ் ஏதும் இல்லாமல் நுகர்வோர்களுக்குப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதியளித்துள்ளது.
“குழந்தைகள் உரிமைக் குறியீடு” என்று அழைக்கப்படும் வருடாந்திர சர்வதேசக் குறியீடு குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதில் நாடுகள் எவ்வாறு ஈடுபாடு கொண்டுள்ளன என்பதின் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்தியுள்ளது.
181 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 117-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
போர்ப் படைத் திட்டங்களுக்குத் தகுதி பெற்ற இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக விமானப் படை அதிகாரியான பாவனா காந்த் உருவெடுத்துள்ளார். இவர் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் போர்ப் படைப் பிரிவில் இணைந்தார். இவர் 2018 ஆம் ஆண்டு மார்ச் அன்று மிக்-2 பைசன் என்ற விமானத்தில் முதன்முறையாகத் தனியாகப் பறந்து சாதனை படைத்தார்.
மோகனா சிங் மற்றும் அவனி சதுர்வேதி ஆகியோருடன் சேர்ந்து, 2016 ஆம் ஆண்டில் விமானப் படையின் போர்ப் பிரிவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண்களில் இவரும் ஒருவராவார்.