TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 25 , 2019 1884 days 673 0
  • நிலத்திலிருந்து ஏவப்படக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் “சாஹீன் - II” என்ற ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. பாகிஸ்தான் மலைப்பகுதிகளில் வாழும் “சாஹீன்” வகைக் கழுகுகளின் நினைவாக இப்பெயர் தரப்பட்டுள்ளது.
    • இது மீயொலி வேகத்துடன் நிலத்திலிருந்து ஏவப்படக்கூடிய நடுத்தர வரம்பு கொண்ட ஏவுகணையாகும்.
    • இது நிலத்திலிருந்து ஏவப்பட்டு நிலப் பகுதிகளைத் தாக்கும்
    • இது கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமைக் கொண்டது.
    • இது 1500 முதல் 2000 கிலோ மீட்டர்கள் வரை உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.
    • இந்த ஏவுகணைகள் இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களை அடைந்து தாக்கும் திறன் கொண்டது ஆகும்.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO - Shanghai Cooperation Organisation) வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பு கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கெக்கில் நடைபெற்றது.
    • இம்மாநாட்டில் இந்தியா சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்துக்கொண்டார்.
    • இது SCO அமைப்பில் இந்தியா முழு நேர உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு நடைபெறும் இரண்டாவது சந்திப்பு ஆகும்.
  • சீனாவிற்குச் சொந்தமான விமான தொழிற்துறைக் கழகத்தின் (Aviation Industry Corporation of China - AVIC) கீழ் இயங்கும் சங்ஷா 5712 விமானத் தொழிற்சாலை நிறுவனம் தனது முதலாவது புதுப்பிக்கப்பட்ட பல்திறன் கொண்ட கொண்ட ஜெஎப்-17 என்ற அதிக திறன் கொண்ட போர் விமானத்தை பாகிஸ்தான் விமானப் படைக்கு வழங்கியது.
    • 2007 ஆம் ஆண்டில் பெய்ஜிங் JF-17 வகை போர் விமானங்களின் முதல் தொகுதியை பாகிஸ்தானிற்கு வழங்கியது.
    • 1990 ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் மீது அமெரிக்கா ஆயுதத் தடைகளை விதித்துள்ளது.
    • அதன் பிறகு பாகிஸ்தானிற்கு ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடு சீனா ஆகும்.
  • சர்வதேச உயிரியல் பன்முகத் தன்மை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக “மர அவசர ஊர்தி” சேவையினை இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் சென்னையில் தொடங்கி வைத்தார்.
    • ‘மர அவசர ஊர்தி’ என்பது மரங்களைக் காப்பதற்கான ஒரு முயற்சியாகும்.
    • இதன் நிறுவனர் K. அப்துல் கானியின் கருத்துப்படி, இது மரங்களுக்கு முதலுதவி அளிப்பதற்காக, அதற்கேற்றவாறு கருத்தாக்கம் பெற்று, வடிவமைக்கப்பட்டு, பொருத்தப்பட்டுள்ளது.
    • மேலும் இது மரம் நடுதலுக்கு உதவுதல், மரங்களை மற்ற இடங்களுக்கு மாற்றுவதற்கு உதவுதல், விதைப் பந்துகளை விநியோகித்தல் ஆகியவற்றிற்கு உதவும்.
  • 2019 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிரில் ரமபோசாவை இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
    • ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸின் தலைவராக (ANC - African National Congress) ரமபோசா பொறுப்பில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்