நிலத்திலிருந்து ஏவப்படக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் “சாஹீன் - II” என்ற ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. பாகிஸ்தான் மலைப்பகுதிகளில் வாழும் “சாஹீன்” வகைக் கழுகுகளின் நினைவாக இப்பெயர் தரப்பட்டுள்ளது.
இது மீயொலி வேகத்துடன் நிலத்திலிருந்து ஏவப்படக்கூடிய நடுத்தர வரம்பு கொண்ட ஏவுகணையாகும்.
இது நிலத்திலிருந்து ஏவப்பட்டு நிலப் பகுதிகளைத் தாக்கும்
இது கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமைக் கொண்டது.
இது 1500 முதல் 2000 கிலோ மீட்டர்கள் வரை உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.
இந்த ஏவுகணைகள் இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களை அடைந்து தாக்கும் திறன் கொண்டது ஆகும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO - Shanghai Cooperation Organisation) வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பு கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கெக்கில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் இந்தியா சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்துக்கொண்டார்.
இது SCO அமைப்பில் இந்தியா முழு நேர உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு நடைபெறும் இரண்டாவது சந்திப்பு ஆகும்.
சீனாவிற்குச் சொந்தமான விமான தொழிற்துறைக் கழகத்தின் (Aviation Industry Corporation of China - AVIC) கீழ் இயங்கும் சங்ஷா 5712 விமானத் தொழிற்சாலை நிறுவனம் தனது முதலாவது புதுப்பிக்கப்பட்ட பல்திறன் கொண்ட கொண்ட ஜெஎப்-17 என்ற அதிக திறன் கொண்ட போர் விமானத்தை பாகிஸ்தான் விமானப் படைக்கு வழங்கியது.
2007 ஆம் ஆண்டில் பெய்ஜிங் JF-17 வகை போர் விமானங்களின் முதல் தொகுதியை பாகிஸ்தானிற்கு வழங்கியது.
1990 ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் மீது அமெரிக்கா ஆயுதத் தடைகளை விதித்துள்ளது.
அதன் பிறகு பாகிஸ்தானிற்கு ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடு சீனா ஆகும்.
சர்வதேச உயிரியல் பன்முகத் தன்மை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக “மர அவசர ஊர்தி” சேவையினை இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் சென்னையில் தொடங்கி வைத்தார்.
‘மர அவசர ஊர்தி’ என்பது மரங்களைக் காப்பதற்கான ஒரு முயற்சியாகும்.
இதன் நிறுவனர் K. அப்துல் கானியின் கருத்துப்படி, இது மரங்களுக்கு முதலுதவி அளிப்பதற்காக, அதற்கேற்றவாறு கருத்தாக்கம் பெற்று, வடிவமைக்கப்பட்டு, பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் இது மரம் நடுதலுக்கு உதவுதல், மரங்களை மற்ற இடங்களுக்கு மாற்றுவதற்கு உதவுதல், விதைப் பந்துகளை விநியோகித்தல் ஆகியவற்றிற்கு உதவும்.
2019 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிரில் ரமபோசாவை இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸின் தலைவராக (ANC - African National Congress) ரமபோசா பொறுப்பில் உள்ளார்.