TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 4 , 2018 2388 days 818 0
  • மத்திய கப்பற் போக்குவரத்து அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு (2020 வரை) மின் விசாக்களோடு (நுழைவு இசைவு) இந்தியாவிற்கு கப்பற்சுற்றுலா வரும் (Cruise tourism) வெளிநாட்டவருக்கு பயோமெட்ரிக் பதிவேட்டில் பதிவு செய்வதிலிருந்து மத்திய உள்துறை அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது. நாட்டில் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மும்பை, மர்மகோவா,  புதிய மங்களூர்,  கொச்சின்,  சென்னை போன்ற ஐந்து பெரிய துறைமுகங்களில் கடற் சுற்றுலாவிற்கு மின்-விசா வழங்கும் வசதி அமலில் உள்ளது.
  • விபத்துகளை குறைக்கும் முயற்சியாக எவரெஸ்ட் சிகரம் உட்பட நாட்டின் அனைத்து மலைகளிலும் தனிநபராக மலையேறுதலை தடை செய்யும், மலையேறுதல் சார்ந்த நெறிமுறைகளை (Mountaineering regulation) திருத்துவதற்கு நேபாள கேபினேட் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இருகைகள் இழந்தவர்களும் (double amputee),  பார்வையிழந்தவர்களும் மலையேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரிச் சட்டம் (Environmental Protection Tax Law) 2018 ஆண்டின் ஜனவரியிலிருந்து செயல்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து, மாசுபடுத்திகளின் வெளியேற்றத்தைத் தடுக்கவும்,  சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சீனா சுற்றுச்சூழல் வரியை வசூலிக்கத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்