TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 30 , 2019 2011 days 757 0
  • அமெரிக்காவில் உள்ள சிக்காகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மைனஸ் 23 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையில் கடத்தும் திறன் கொண்ட “லாந்தனம் சூப்பர்ஹைட்ரைட்ஸ்” என்ற ஒரு மீக்கடத்தியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
    • இதற்கு முன்பு மைனஸ் 73 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் கடத்தும் திறன் மீக்கடத்தியை உருவாக்கியதே சாதனையாக இருந்தது.
  • இந்திய தேசிய திரைப்படக் காப்பகத்தினால் உருவாக்கப்பட்ட மின்னணு வடிவிலான “டிஜிட்டல் டைலமா” (இரண்டக நிலை) என்பதின் இந்திப் பதிப்பை ஆஸ்கர் நிறுவனத்தின் தலைவரான ஜான் பெய்லி தொடங்கி வைத்தார்.
    • பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த டிஜிட்டல் இரண்டக நிலையானது மில்ட் ஷெல்ட்டோன் மற்றும் ஆண்டி மால்ட்ஸ் ஆகியோரால் எழுதப்பட்டதாகும். இது தற்பொழுது திரைப்படத் தொழிலில் முக்கியமான டிஜிட்டல் தரவுகளை சேமித்து அதை அணுகும் முறை குறித்து விவாதிக்கின்றது.
  • பின்லாந்தின் ஹெல்சிங்கியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் நச்சுவியலாளர்களின் கருத்தரங்கின் போது வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, உலகிலுள்ள நதிகள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதிப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உச்ச வரம்பை விட 300 மடங்கு அதிகரித்துள்ளது. உதாரணம் : இலண்டனின் தேம்ஸ் நதியில் உள்ள அதிக அளவிலான தோல் மற்றும் சிறுநீரகத் தொற்று நுண்ணுயிர் எதிர்ப்பியான சிப்ரோப்ளோக்ஸாசின்.
    • வங்க தேசம், கென்யா, கானா, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் நுண்ணுயிரி எதிர்ப்பிகளால் நதிகள் மாசுபடுதல் அதிக அளவில் உள்ளது.
  • மே 25 அன்று நடைபெற்ற 72-வது கேன்ஸ் திரைப்படத் திருவிழாவின் போது தென் கொரியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரான போங் ஜோன் ஹே என்பவரின் “பாரசைட்” என்ற திரைப்படத்திற்காக அவர் “பால்ம் டி ஓர்” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். கேன்ஸில் வழங்கப்படும் மிகவும் புகழ்பெற்ற விருது இதுவாகும்.
    • 1946 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கேன்ஸ் திரைப்படத் திருவிழாவானது பிரான்சின் கேன்ஸில் நடைபெறும் ஒரு வருடாந்திரத் திரைப்படத் திருவிழாவாகும். மிகப்பெரிய மூன்று திரைப்படத் திருவிழாக்களான “வெனீஸ் திரைப்படத் திருவிழா மற்றும் பெர்லின் சர்வதேசத் திரைப்படத் திருவிழா” ஆகியவற்றுடன் இதுவும் ஒன்றாகும்.
  • மத்தியப் பிரதேசத்தின் பன்டேல்கண்ட் பகுதியில் உள்ள ஓர்ச்சா நகரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளங்களுக்கான உத்தேசப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
    • யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளங்களின் பட்டியலில் ஏற்கெனவே 37 இந்தியப் பாரம்பரியத் தளங்கள் உள்ளன. சாஞ்சியில் உள்ள புத்த நினைவுச் சின்னங்கள், பிம்பேத்காவின் பாறைக் குகைகள் மற்றும் கஜுராஹோ நினைவுச் சின்னக் குழுக்கள் ஆகியவை மத்தியப் பிரதேசத்தில் உள்ள சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாரம்பரியத் தளங்களாகும்.
  • 2019 ஆம் ஆண்டின் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக சச்சின் ரசிகர் சுதிர் கௌதம், கோலி ரசிகர் சுகுமார், பாகிஸ்தானின் சச்சா அப்துல் ஜலீல், வங்க தேசத்தின் சோயப் அலி, இலங்கையின் கயன் சேனன்நாயகே ஆகியோர்களுக்கு முதல் உலக விளையாட்டு ரசிகர் விருது வழங்கப்பட விருக்கின்றது.
    • 2019 ஆம் ஆண்டு மே 30 அன்று ஐசிசி உலகக் கோப்பைப் போட்டி தொடங்கவிருக்கின்றது.
  • சுவிட்சர்லாந்தின் கிரியென்ஸில் நடைபெற்ற சேகிசூய் ஓபனில் மகேஷ் மங்கோன்கர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இப்போட்டியில் முதன்முறையாக வெற்றி பெற்றிருந்தார்.
    • சேகிசூய் ஓபன் என்பது இவ்விளையாட்டை நிர்வகிக்கும் உலக அமைப்பான தொழில்சார் ஸ்குவாஷ் மன்றத்தின் (Professional Squash Association - PSA) ஒரு சேலஞ்சர் தொடர் போட்டியாகும். மகேஸ் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெர்னாட் ஜவ்மீ என்பவரைத் தோற்கடித்தார்.
  • மலாவி நாட்டைச் சேர்ந்த இளைஞர் மற்றும் உரிமைகளுக்கான ஆர்வலரான சார்லஸ் கஜோலோவேகா என்பவர் நீடித்த வளர்ச்சி இலக்கு – 16 என்பதிற்கான (SDG - Sustainable Development Goal) ஐ.நாவின் இளையோர் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதை அவர் உறுதி செய்தார்.
    • SDG-16 ஆனது அமைதி, நீதி மற்றும் வலிமையான நிறுவனங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்