TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 1 , 2019 1877 days 847 0
  • பஞ்சாப் மாநில அரசு, இணைய தள உணவு விநியோகிக்கும் நிறுவனங்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து உணவு விடுதிகளிலிருந்துப் பெறப்படும் உணவுகளில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தின் (Food Safety and Standards Authority of India - FSSAI) “தூய்மைத் தரம்” என்ற இலச்சினையைக் காட்சிப்படுத்த வேண்டும் என்று நிகழ்நேர (ஆன்லைன்) முறையில் உணவு வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கி தற்பொழுதுள்ள “இந்திய அடமானப் பத்திரங்களின்” நிலையை ஆய்வு செய்வதற்காகவும் அதை விரிவுபடுத்துவதற்குமான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்காகவும் பெயின் அண்ட் கோ நிறுவனத்தின் மூத்த ஆலோசகரான ஹர்ஷ் வர்தன் தலைமையில் 6 நபர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.
    • இது “வீட்டு நிதி பத்திரச் சந்தை வளர்ச்சிக் குழு” என்று பெயரிடப்பட்டு இருக்கின்றது.
  • தேசிய மாதிரி ஆய்வு அமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆய்வின்படி, 10,000 மக்களுக்கு 20.6 சுகாதாரப் பணியாளர்களை இந்தியா கொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் படி 10,000 மக்களுக்கு 22.8 சுகாதாரப் பணியாளர்கள் இருக்க வேண்டும்.
    • 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் பேறுகால உதவியாளர்கள் தனியார் துறையில் பணியாற்றுகின்றனர்.
  • தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal - NGT) ஒரு லிட்டர் நீரில் கரைந்துள்ள மொத்தத் துகள்கள் (TDS - total dissolved solids) 500 மில்லி கிராமிற்கு குறைவாக இருப்பின் எதிர் சவ்வூடு பரவல் முறையிலான நீர் சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தை அறிவுறுத்தியுள்ளது.
    • TDS ஆனது ஒரு லிட்டர் நீரில் 500 மில்லி கிராமிற்கு குறைவாக இருப்பின் எதிர் சவ்வூடு பரவல் முறை பயன்படாது. மாறாக இது நீரில் உள்ள முக்கியமான கனிமங்களை நீக்கிவிடும். மேலும் இது நீரில் தேவையற்ற கழிவுகளை ஏற்படுத்தும். 80 சதவிகித நீர் எதிர் சவ்வூடு முறையிலான சுத்திகரிப்பான்களில் வீணாகின்றது.
  • விமானப் படைப் பணியாளர்களின் தலைவர் மற்றும் இந்திய விமானப் படைத் தளபதி பைரேந்தர்சிங் தனோவா இராணுவப் பணியாளர் குழுத் தலைமையின் (COSC - Chairman of the Chief of Staff Committee) புதிய தலைவராக ஆகியுள்ளார்.
    • பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு ஆலோசனைகளை வழங்குவதும் அமைச்சரவையின் கவனத்திற்குத் தேவைப்படும் அனைத்து இராணுவ விவகாரங்களையும் பாதுகாப்புத் துறை அமைச்சரின் மூலம் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவிற்கு அளிப்பதும் இதன் பணியாகும்.
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச குழந்தைப் பருவ அறிக்கையின்படி, தற்பொழுது பிறக்கும் குழந்தைகள், முன் எப்போதும் இல்லாத அளவில் கடந்த காலங்களைவிட ஆரோக்கியமாக வளர, கல்வியறிவு கொண்டதாக, பாதுகாப்பானதாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகளைக் கொண்டிருக்கும்.
    • இது குழந்தைகள் உரிமைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பிற்காகப் பணியாற்றும் ஒரு அரசு சாரா நிறுவனமான “குழந்தைகளைக் காப்பாற்றுதல்” (Save the Children) என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. இதில் இந்தியா 113-வது இடத்தில் உள்ளது.
  • ஆப்பிரிக்க நாடுகள், இரஷ்யா மற்றும் சீனா ஆகியவை எதிர்த்த போதிலும் தெற்கு சூடான் மீதான ஆயுதத் தடையை ஐ.நா. பாதுகாப்பு ஆணையம் மேலும் 1 ஆண்டு காலத்திற்கு நீட்டித்துள்ளது.
    • 15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு ஆணையத்தில் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு குறைந்த பட்சம் 9 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
  • சிலியின் நவரினோ தீவில் உள்ள துறைமுகம் மற்றும் கப்பற்படைத் தளமான பியூர்டோ வில்லியம்ஸ், தற்பொழுது உலகின் மிகவும் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு நகரமாக உருவெடுத்துள்ளது.
    • இதற்கு முன் அர்ஜென்டினாவின் யுசியா என்ற நகரம் இந்த சிறப்புத்துவத்தைப் பெற்றிருந்தது.
  • வருடாந்திரமாக 1.2 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் முன்மொழியப் பட்டுள்ள ஜெவார் விமான நிலையம் 2023 ஆம் ஆண்டிலிருந்துச் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
    • இது தேசியத் தலைநகரப் பகுதிக்கான இரண்டாவது விமான நிலையமாக செயல்படவிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்