ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் அபுதாபியில் உள்ள கேரளாவைச் சேர்ந்த முதலீட்டாளரான யூசப் அலிக்கு முதலாவது தங்க வசிப்பிட அனுமதியை வழங்கியுள்ளது.
இந்தத் திட்டம் நீண்ட கால முதலீட்டு இலக்குகளை உருவாக்குவதற்கும் சொத்துக்களைச் சொந்தமாக வைத்திருப்பதற்கும் வெளிநாட்டவர்களை ஊக்குவிக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவிகிதத்தினர் இந்தியப் புலம் பெயர்ந்தவர்கள் ஆவார்.
மதராஸ் உயர் நீதிமன்றம், 1000 திரைப்படங்களுக்கு மேல் இளையராஜாவால் இசையமைக்கப்பட்ட 4500 பாடல்களுக்கு “சிறப்புத் தார்மீக உரிமையாளர்” இளையராஜா ஆவார் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. பதிப்புரிமைச் சட்டம், 1957-ன் பிரிவு 57-ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவு மற்றவர்களிடம் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இசையைக் கொடுத்த பின்னரும் அதற்கான உரிமையைக் கோரும் ஒரு இசையமைப்பாளரின் உரிமையைப் பாதுகாக்கின்றது.
2019 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று (ஜூன் 05), மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் “மரக்கன்று நடுதலுடன் ஒரு சுய புகைப்படம்” என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார். இவர் மரக்கன்று நட்டு அதை சுயபடம் எடுத்துப் பதிவிட வேண்டும் என்று மக்களைக் கேட்டுக் கொண்டார்.
டிஜிட்டல் பண வழங்கீடுகள் மீதான நந்தன் நீல்கேனி குழுவானது இந்தியாவில் டிஜிட்டல் பண வழங்கீடுகளை அதிகரிப்பதற்காக பணப் பரிமாற்றத்தின் போது விதிக்கப்படும் கட்டணங்களை ஒழித்தல், ஆர்டிஜிஎஸ் (RTGS) மற்றும் நெப்ட்-யை (NEFT) முழு நேரமும் செயல்படுத்துதல், விற்பனையின் போது பணம் செலுத்தும் இயந்திரங்களின் வரியில்லா இறக்குமதி ஆகியவற்றைப் பரிந்துரைத்துள்ளது.
மேலும் இது இந்தியாவிற்குப் பணம் அனுப்புதலை எளிமைப்படுத்துவதற்காகவும் வெளி நாட்டில் பணம் வழங்கீடுகளுக்கு உதவுவதற்காகவும் ரூபே மற்றும் பிம் யுபிஐ போன்ற இந்திய பண வழங்கீடுகள் அமைப்புகளை உலகமயமாக்குவதையும் பரிந்துரைத்துள்ளது.
2018-19 ஆம் விவசாய ஆண்டிற்கான உணவு தானியங்கள் உற்பத்தி 283 மில்லியன் டன்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நெல் - 115 மில்லியன் டன்கள் (இது வரை இல்லாத அளவுக்கு அதிக உற்பத்தி); கோதுமை - 101 மில்லி டன்கள்; பருப்பு வகைகள் – 23 மில்லியன் டன்கள்.
இந்தியக் கடற்படையானது இந்தியக் கடற் பகுதியில் (IOR - Indian Ocean Region) தனது யுத்தி அடிப்படையிலான படைகளை நிறுத்துதலை விரிவுபடுத்தியுள்ளது. இந்திய விமானப்படை ஓமனின் சலலாஹில் இருந்து ஏடன் வளைகுடா வரை கடற் கொள்ளையிலிருந்துப் பாதுகாத்திட P-8I என்ற நீண்ட வரம்பு கொண்ட கடல்சார் கண்காணிப்பு விமானத்தையும் நிறுத்தியுள்ளது.
IOR பகுதியின் முக்கியத்துவம் காரணமாக, இந்தியக் கடற்படை IOR-ல் உள்ள கடல் பாதைகள் அல்லது சிக்கலான பகுதிகள் ஆகியவற்றில் கண்காணிப்பு மற்றும் தனது படைகளின் இருப்பைத் தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றது.
ஒடிசாவில் உள்ள ஐசிஏஆர் - தேசிய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் “நெல் வெடிப்பு” நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறனுக்கு உதவக் கூடிய நெல்லின் பல்வேறு வகையான மரபணுக்களை கண்டறிந்துள்ளனர்.
“மேக்னபோர்த்தே ஓரைசே” என்ற ஒரு பூஞ்சையானது நெல் பயிரின் முக்கியமான நோய்களில் ஒன்றான நெல் வெடிப்பை ஏற்படுத்துகின்றது.
இந்தியக் குடியரசுத் தலைநகர் இராம்நாத் கோவிந்த் இதுல் பிடிரின் - கொண்டாட்டங்களின் போது இந்தியக் குடிமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது விரதத்தின் புனித மாதமான ரமடான் / ரம்சானின் நிறைவு பெறுவதைக் குறிக்கும் ஒரு கொண்டாட்டமாகும். சவால் மாதத்தின் முதலாவது தினத்தில் இது கொண்டாடப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதியிலிருந்து அமெரிக்கா இந்தியாவிற்கான GSP (பொது முன்னுரிமை அமைப்பு) வர்த்தகப் பலன்களைத் திரும்பப் பெற்றுள்ளது.
2017 ஆம் ஆண்டில் GSP திட்டம் அமெரிக்காவிற்கு 5.7 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஏற்றுமதிப் பொருள்களின் வரியில்லா அணுகலுக்கு அனுமதியளித்தது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடுப்பதற்காக “மஞ்சள் கோடு பிரச்சாரம்” என்ற ஒரு பிரச்சாரத்தை மணிப்பூர் அரசு தொடங்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டின் எப்ஐஎப்ஏ (FIFA) பெண்கள் உலகக் கோப்பைக்கான அதிகாரப் பூர்வ சின்னம் “எட்டி” என்று பெயரிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்ட சபையின் துணை சபாநாயகர் வி.பி. சிவக்கொழுந்து புதுச்சேரி சட்ட சபையின் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.