TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 8 , 2019 1870 days 630 0
  • மத்திய உள்துறை அமைச்சகம் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டம், 2010 என்ற சட்டத்தின் கீழ் (Foreign Contribution Regulation Act - FCRA) அனைத்து அரசு சாராக் குழுக்களையும் ஒரு மாதத்திற்குள்ளாக, அவர்களது அலுவலர்கள் மற்றும் முக்கியப் பணியாளர்களின் சேர்க்கை, நீக்கம் மற்றும் மாற்றங்கள் பற்றியத் தகவல்களைச் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தியிருக்கின்றது.
    • இச்சட்டம் இந்தியாவில் அரசு சாரா அமைப்புகளால் பெறப்படும் வெளிநாட்டு நன்கொடையின் வரவு மற்றும் பயன்பாடு ஆகியவற்றை ஒழுங்குமுறைப் படுத்துகின்றது.
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள இரசாயனம் மற்றும் மருந்துத் துறை தொடர்பான 4 நிறுவனங்கள் மீது ரூ.74 கோடி அபராதத் தொகையை இந்தியப் போட்டி ஆணையம் (Competition Commission of India – CCI) விதித்துள்ளது. போட்டிச் சட்டம், 2002 ன் விதிமுறைகளை இந்த 4 நிறுவனங்களும் மீறியுள்ளதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • CCI என்பது இந்தியா முழுவதும் போட்டிச் சட்டம், 2002 ஐ செயல்படுத்துவதற்காகப் பணியாற்றும் இந்திய அரசின் ஒரு சட்டப் பூர்வ அமைப்பாகும். இது போட்டியின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தடுக்கின்றது.
  • டெல்லி அரசால் முன்மொழியப்பட்ட திட்டத்தின்படி பெண்கள் டெல்லி மெட்ரோவிலும் பேருந்துகளிலும் அவர்கள் மேற்கொள்ளும் பயணத்திற்கு கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.
    • இந்த நடவடிக்கை பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப் பட்டிருக்கின்றது.
  • அமெரிக்க அரசாங்கம் அனைத்து விசா விண்ணப்பதாரர்களையும் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்கள் பயன்படுத்திய அவர்களது சமூக ஊடக பயனர் பெயர்களையும், மின்னஞ்சல் முகவரிகளையும், தொலைபேசி எண்களையும் அவர்களது விசா விண்ணப்பப் படிவத்தில் அளிக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கின்றது.
    • டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவிற்கு வரும் பயணிகள் மற்றும் தகுதியான குடியேற்றவாசிகளுக்கான மிகக் கடுமையான சரிபார்ப்புகளை உறுதி செய்திட எண்ணுகின்றது.
  • ஏறத்தாழ 1,26,000 ஆண்டுகள் முதல் 1,17,000 வரையிலான முந்தைய காலத்தில் நீடித்த கடைசியான பனிக் காலத்தின் போது வடகிழக்கு சைபீரியாவில் வாழ்ந்த ஒரு பெயர் தெரியாத பழமையான மக்கள் கூட்டத்தைப் பரிமாண மரபணுவியலாளர்கள் குழு ஒன்று கண்டறிந்திருக்கின்றது.
    • இக்குழு அந்த மக்கள் கூட்டத்தைப் பண்டைய வடக்கு சைபீரியர்கள் என்றுப் பெயரிட்டு அவர்களது இருப்பினை உள்நாட்டு அமெரிக்க வம்சாவளியில் “காணாமல் போன தொடர்பு” என்று வரையறுத்திருக்கின்றது.
  • சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சமீபத்தில் டெல்லியில் மக்கள் தொகை ஆராய்ச்சி மையங்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கு ஒன்றை நடத்தியிருந்தது.
    • இந்நிகழ்ச்சி சுகாதார அமைச்சகத்தின் முக்கியத் திட்டங்களையும் அவற்றின் தொடர்ச்சியாக கண்காணிப்பினையும் பற்றிய பல்வேறு அம்சங்களை எடுத்துக் காட்டிட நடத்தப்பட்டதாகும்.
  • மத்திய அமைச்சரவையானது சிறு சில்லறை வர்த்தகர்களுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் ஒரு மாதாந்திர ஓய்வூதியத் திட்டத்தை ஏற்படுத்திட ஒப்புதல் அளித்திருக்கின்றது. இத்திட்டத்தின் பயன் 3 கோடிப் பயனாளிகளைச் சென்றடைந்திடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
    • இத்திட்டத்தின் கீழ் சிறு கடை உரிமையாளர், சில்லறை வர்த்தகர் மற்றும் சுயவேலைவாய்ப்பு நபர்கள் என அனைவரும் அவர்கள் தங்களின் 60 வயதிற்குப் பிறகு மாதம் 3000 ரூபாய் என்ற அளவில் ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கப் படுகின்றனர்.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி சங்கமானது மின்னணு புகையிலை உட்பட மின்னணு நிக்கோடின் அளிப்பு சாதனங்கள் (Electronic Nicotine Delivery Systems - ENDS) மீது முழுமையான தடை விதிக்கப் பரிந்துரை அளித்திருக்கின்றது.
    • மின்னணு சிகரெட்டுகள் புகையிலையைக் கொண்டிராமல் நிக்கோடினை மட்டுமே கொண்டிருப்பதால் அவை சிகரெட்டுகள் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் சட்டம் 2003 (விளம்பரப்படுத்தல் மீதான தடை மற்றும் வர்த்தகம், வியாபாரம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடு) என்ற சட்டத்தின் கீழ் வராது.
  • நிர்மலா சீத்தாராமன் இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதி அமைச்சராகப் பதவியேற்றார்.
    • இதற்குமுன் இந்திரா காந்தி, தனது பிரதமர் பதவிக் காலத்தில் 1970 முதல் 1971 வரையிலான காலக் கட்டத்தில் நிதியமைச்சராக இருந்தார். 17வது மக்களவையில் உள்ள இதர பெண் கேபினட் அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி மற்றும் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோராவர்.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் சமீபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா பாட்டியாவை வள மேலாண்மை, நீடித்த தன்மை மற்றும் பங்காண்மை ஆகியவற்றுக்காக பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் (UN-Women) இணை நிர்வாக இயக்குநராக நியமித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்