TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 11 , 2019 1867 days 695 0
  • இரு சக்கர வாகனங்களுக்கான பாரத் நிலை – VI என்ற தகுதி நிலைக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
    • சர்வதேச வாகனத் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநரான தினேஷ் தியாகி என்பவர் பாரத் நிலை – VI விதிமுறைகளுக்கான இந்தியாவின் முதலாவது வகை ஒப்புதல் சான்றிதழை வெளியிட்டார். அவர் இதனை ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனத்திடம் சமர்ப்பித்தார்.
  • 2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களின் முக்கிய நிகழ்ச்சி இந்த மாதத்தின் 21 ஆம் தேதியன்று ராஞ்சியில் உள்ள பிரபாத் தாராவில் நடத்தப்படவிருக்கின்றது.
    • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த முக்கியமான நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கவிருக்கின்றார்.
  • பாய்ச்சுங் பூட்டியாவைப் பின்னுக்குத் தள்ளி மிகவும் தலைசிறந்த கால்பந்து வீரராக சுனில் சேத்திரி உருவெடுத்துள்ளார். பாய்ச்சுங் பூட்டியா 107 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
  • செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் சர்வதேசப் பொருளாதார மன்றம் என்பது சர்வதேசப் பொருளாதாரத் துறைக்கான ஒரு வருடாந்திர ரஷ்ய வணிக மற்றும் முதலீட்டு நிகழ்வாகும்.
    • இது 1997 ஆம் ஆண்டு முதல் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடத்தப்பட்டு வருகின்றது.
  • 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளுக்கு உலகச் சுகாதார நிறுவனத்தின் (World Health Organization - WHO) வெளித் தணிக்கையாளராக இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரான இராஜீவ் மெஹரிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • ஜெனீவாவில் நடைபெற்ற 72வது உலக சுகாதாரச் சந்திப்பின் போது பெரும்பான்மையான வாக்குகளுடன் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு சீக்கியரான ஜீவன்தீப் கோலி என்பவர் எல்ஜிபிடி சமூகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வானவில் வண்ணத்திலான தலைப் பாகையை அணிந்து, அவற்றைப் படம் எடுத்துப் பதிவேற்றியதற்காக சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றார்.
  • அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையேயான உறவுகளுக்கு தனது பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக அரசியல் மேதைமைக்கான ஜார்ஜ் எச். டபிள்யூ புஷ் விருதை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் பெற்றுள்ளார்.
  • புகழ்பெற்ற கிரிக்கெட் போட்டி ஒளிப்பரப்பாளரான ஆஷிஷ் ரே என்பவர் “கிரிக்கெட் உலகக் கோப்பை: இந்தியாவிற்கான சவால்” என்ற ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
    • 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பையின் தொடக்கப் பதிப்பிலிருந்து இந்தியக் கிரிக்கெட்டின் பயணம் குறித்து இவர் எழுதியுள்ளார்.
  • இந்திய இராணுவம் மற்றும் இந்திய விமானப் படை ஆகியவை கூட்டாக இணைந்து பஞ்சாப் சமவெளிகளில் “கர்கா பிரகார்” என்ற பெயர் கொண்ட ஒரு பயிற்சியை நடத்தின.
    • இந்தப் பயிற்சி பல முக்கியமான செயல்பாட்டு அம்சங்களை உறுதிபடுத்தியது. இது கர்கா என்ற படைப் பிரிவின் உயர் செயல்பாட்டுத் தயார் நிலையை எடுத்துக் காட்டியது.
  • 2019 ஆம் ஆண்டின் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு நாட்கள் நடைபெறக் கூடிய ஒரு “யோகா மகாஉத்சவத்தை” ஆயுஷ் அமைச்சகம் புது தில்லியில் நடத்தியது.
  • சஹாரா குழுமம் சமீபத்தில் “சஹாரா எவோல்ஸ்” என்ற புதிய குறியீட்டுப் பெயரின் கீழ் மின்சார வாகனத் தயாரிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.
    • இந்த நிறுவனம் மின்சார இரு சக்கர வாகனங்கள், மின்சார உந்து வண்டிகள், மின்சார மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் மின்சார சரக்கு வாகனங்கள் ஆகியவற்றை வழங்கவிருக்கின்றன.
  • இந்தியாவின் மிகப்பெரிய கொடையாளர் மற்றும் வியாபாரப் புள்ளிகளில் ஒருவரான அசிம் பிரேம்ஜி ஜூலை 30 ஆம் தேதியன்று விப்ரோவின் நிர்வாகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆகிய பதவிகளிலிருந்து ஓய்வு பெறவிருக்கின்றார்.
  • 2018 ஆம் ஆண்டின் போக்குவரத்து நெரிசல் குறியீடானது ஆம்ஸ்டர்டேமைச் சேர்ந்த டோம்டோம் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது. இது தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகின் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரமாக மும்பையைத் தரவரிசைப் படுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் தில்லி நகரம் நான்காவது இடத்தில் உள்ளது.
  • புகழ்பெற்ற நாடக ஆசிரியர், திரைப்பட வசன எழுத்தாளர் மற்றும் “கிரேஸி கிரியேஷன்ஸின்” நிறுவனரான கிரேஸி மோகன் காலமானார். இவரது இயற்பெயர் மோகன் இரங்காச்சாரி என்பதாகும்.
    • சாக்லெட் கிருஷ்ணா என்பது இவருடைய புகழ்பெற்ற மற்றும் மிகவும் அறியப்படுகின்ற ஒரு நாடகமாகும்.
  • 5 முறை சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றிய மற்றும் புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரான RV ஜானகிராமன் சமீபத்தில் காலமானார்.
  • இராஜஸ்தானில் உள்ள சுரு நகரில் 50.8 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இது நாட்டிலும் அம்மாநிலத்தின் ஜெய்ப்பூர் வானிலை மையத்தாலும் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்