TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 17 , 2019 1861 days 661 0
  • உலக விலங்குகள் சுகாதார அமைப்பு “ஒரே சுகாதாரம்” என்ற ஒரு கருத்துருவை எடுத்துரைத்துள்ளது. இது மனிதர்களின் சுகாதாரமும் விலங்குகளின் சுகாதாரமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும் தற்பொழுது அவைகள் வாழும் சூழல் அமைப்புகள் ஒன்றோடொன்றுப் பிணைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளது.
    • தற்பொழுதுள்ள மனிதத் தொற்று நோய்களில் 60 சதவிகித நோய்கள் விலங்குவழி மூலம் பரவுபவைகள் ஆகும். வளர்ந்து வரும் மனிதத் தொற்று நோய்களில் 75 சதவிகித நோய்கள் விலங்குகளிடமிருந்துப் பரவுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பரவும் 5 புதிய மனித நோய்களில் 3 நோய்கள் விலங்குகளிடமிருந்துப் பரவுகின்றன.
  • ஜெர்மனி மற்றும் இரஷ்யாவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழு பிரபஞ்சத்தின் முப்பரிமாண X-கதிர் வரைபடத்தை உருவாக்கக் கூடியதும் இதுவரை கண்டறியப்படாத அதிக நிறை கொண்ட கருந்துளைகள், இருண்ட ஆற்றல் மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவற்றை கண்டுபிடிக்கக் கூடியதுமான ஒரு விண்வெளித் தொலைநோக்கியைச் செலுத்தத் தயாராகி வருகின்றனர்.
    • இது அலைவரிசை - ராண்ட்ஜன் – காமா தொலைநோக்கி என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் திரவ பெட்ரோலிய வாயுவின் (LPG - Liquefied Petroleum Gas) தற்பொழுதைய சந்தை அமைப்பு குறித்து ஆய்வு செய்வதற்காகப் பொருளாதார நிபுணர் கிரித் பரீக் என்பவரின் தலைமையின் கீழ் 5 நபர்கள் கொண்ட ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
    • இந்தத் துறையில் அதிக அளவிலான தனியார் நிறுவனங்களைக் கொண்டு வரும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகின்றது. மேலும் இவர்கள் சரிசமமான LPG சந்தையாளர்களாக செயல்படுவதற்கும் தகுதி உடையவர்களாவர்.
  • அஸ்ஸாமின் அய்சுவலில் உள்ள அஸ்ஸாம் ரைபில்ஸ் படையின் தலைமை வளாகத்தில் மிசோரம் மாநில முதல்வர் சொரம்தங்கா மரக்கன்றுகளை நட்டு பசுமை மிசோரம் தினத்தை அனுசரித்தார்.
    • 1999 ஆம் ஆண்டு ஜுன் 11 முதல் இத்தினம் மிசோரமில் அனுசரிக்கப்படுகின்றது.
  • துணிகர முதலீட்டாளரான மேரி மீக்கர் என்பவரினால் வெளியிடப்பட்டுள்ள இணையதளப் போக்குகள் மீதான அறிக்கையின்படி, உலக இணையதளப் பயன்பாட்டாளர்களில் 12 சதவிகிதப் பயன்பாட்டாளர்களுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
    • இந்தப் பட்டியலில் 21 சதவிகித இணையதளப் பயன்பாட்டாளர்களுடன் சீனா முதலிடத்தையும் 8 சதவிகித இணையதளப் பயன்பாட்டாளர்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
  • போர்ப்ஸ் பத்திரிக்கையின்படி உலகின் பணக்காரப் பெண்ணாக பாடகியான ரிகான்னா உருவெடுத்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 600 மில்லியன் டாலர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • வெனிசூலா அரசு, பணத்தின் மதிப்பை மிக அதிக அளவில் குறைத்த பணவீக்கம் (மிகுவீக்கம்) காரணமாக 3 புதிய பணத் தாள்களை வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளது.
    • இது 1.3 மில்லியன் மடங்கிற்கும் மேலே சென்ற மிகு பணவீக்க நிலையைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • எஸ்தோனியா, நைஜீரியா, செயின்ட் வின்சென்ட், கிரனேடெய்ன்ஸ், துனிசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியிலிருந்து 2 ஆண்டு காலத்திற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • பாரத் டையனமிக்ஸ் நிறுவனத்தின் விசாகப்பட்டினப் பிரிவு வர்ணாஸ்திரம் என்ற அதிக எடை கொண்ட நீர்மூழ்கிக் குண்டுகளைத் தயாரிப்பதற்காக இந்தியக் கடற் படையுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
    • வர்ணாஸ்திரம் என்பது கப்பலிலிருந்து ஏவப்படும் நீர்மூழ்கி எதிர்ப்புக் குண்டாகும். இது மிகவும் மேம்படுத்தப்பட்ட தானியங்கி மற்றும் தொலைக் கட்டுப்பாட்டு வழிகாட்டு அமைப்புகளுடன் பொருத்தப்பட்ட மின்சாரத்தால் இயக்கப்படக்கூடிய ஒரு நீர்மூழ்கி ஆயுதமாகும்.
  • தொலைத் தொடர்பு துறையின் உயரிய முடிவு எடுக்கும் அமைப்பான, டிஜிட்டல் தகவல் ஆணையம் (DCC - Digital Communications Commission) பாரதி ஏர்டெல் மற்றம் வோடாபோன் ஆகிய இரு நிறுவனங்களின் மீது அபராதம் விதிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • 2016 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் சந்தையில் நுழைந்த போது அவற்றுடன் தொடர்பு கொள்ள மறுத்ததற்காக இந்நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்