TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 18 , 2019 1992 days 746 0
  • மகாராஷ்டிராவின் நாசிக் நகர காவல்துறையானது பெண்களைத் துன்புறுத்துதல் மற்றும் கேலி செய்தல் போன்ற சம்பவங்களைக் கண்காணிப்பதற்காக “நிர்பயா படையை” அமைத்துள்ளது.
  • சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்களை (358) அடித்த வீரராக ரோஹித் ஷர்மா உருவெடுத்துள்ளார்
    • இவர் இந்தச் சாதனையைப் பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியில் புரிந்தார்.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது முதல்முறையாக 2 பெண் ஆராய்ச்சியாளர்களை சந்திரனுக்கான இந்தியாவின் இரண்டாவது திட்டமான சந்திரயான் -2 திட்டத்திற்குத் தலைமை தாங்க  நியமித்துள்ளது.
    • ரிது கரிதால் இத்திட்டத்தின் பணி இயக்குநராகவும் முத்தையா வனிதாஇதன் திட்ட இயக்குநராகவும் பணியாற்றுவார்.
  • உலகக் கோப்பைப் போட்டி வரலாற்றில் முதல் ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளராக தென்னாப்பிரிக்காவின் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் உருவெடுத்துள்ளார்.
    • இவர் இச்சாதனையை 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் புரிந்தார்.
  • நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக “பிங்க் சாரதி” எனும் வாகனங்களை கர்நாடகா அரசானது அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தின் பெட்டுல் மாவட்டதில் உள்ள பாஞ்சா எனும் கிராமமானது இந்தியாவின் விறகு அடுப்புகளற்ற மற்றும் ஏறக்குறைய LPG எரிவாயு உருளைகற்ற கிராமமாக உருவெடுத்துள்ளது. இங்குள்ள 75 வீடுகளும் தங்கள் சமையல் தேவைகளுக்குச் சூரிய சக்தி அடுப்புகளையேச் சார்ந்துள்ளனர்.
  • நாகாலாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான “சுகோயு பள்ளதாக்கு” ஆனது உலக சுற்றுச்சுழல் தினத்தினை முன்னிட்டு “நெகிழிகளற்ற மண்டலமாக” அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
  • அமெரிக்க மக்களவைக்குத் தலைமை தாங்கிய முதல் தெற்காசிய அமெரிக்கப் பெண்மணி எனும் பெருமையை இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான பிரமிளா ஜெயபால் பெற்றுள்ளார்.
  • பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றமானது ஹரியானாவில் உள்ள அனைத்து விலங்குகளும் மனிதர்களைப் போன்று சட்ட உரிமைகளுக்கு தகுதியான சட்டப்பூர்வமான நபர்கள் என தீர்ப்பளித்துள்ளது.
    • இந்த உத்தரவானது ஹரியானா மாநிலத்திற்கு எதிரான கர்னைல் கிங் மற்றும் பலரின் வழக்கில் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்