TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 19 , 2019 1991 days 711 0
  • ஒருங்கிணைக்கப்பட்ட எல்லை மேலாண்மைத் திட்டத்தைச் (Coordinated Border Management Programme - CBMP) செயல்படுத்துவதற்காக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force - BSF) மற்றும் வங்க தேச எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவை ஒரு இணைப்பு விவாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது வங்கதேசத்தின் டாக்காவில் நடைபெற்ற 48-வது பொது இயக்குநர் நிலையிலான சந்திப்பின் போது கையெழுத்திடப்பட்டது.
    • இவர்கள் கால்நடை மற்றும் போதைப் பொருள் கடத்தலைத்  தடுப்பதற்காகவும் சர்வதேச எல்லைப் பகுதியின் முக்கியத்துவம் குறித்து எல்லைப் பகுதியில் உள்ளவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் சர்வதேச எல்லைகளைக் கடக்கும் குற்றவாளிகளைத்  தடுப்பதற்காகவும் ஒருங்கிணைக்கப்பட்ட கண்காணிப்பை அதிகரிக்கவிருக்கிறார்கள்.
  • உத்தரப் பிரதேச அரசாங்கமானது அம்மாநிலத்தின் அரசாணையை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுடன் சேர்த்து சமஸ்கிருத மொழியிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
  • சுற்றுச் சூழலுக்கு உகந்த ஒரு முன்னெடுப்பாக லக்னோ வளர்ச்சி ஆணையம், தனது முதலாவது நெகிழிக் கழிவுச் சாலையைக் கட்டமைத்துள்ளது. மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தினால் (CRRI - Central Road Research Institute) அமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி இச்சாலை கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் நிர்வாகக் குழுவானது நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் S. ஜெய்சங்கர் ஆகியோருக்கு “புகழ்பெற்ற முன்னாள் மாணவர்கள்” என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கத் திட்டமிட்டுள்ளது.
    • இந்த விருதைப் பெறும் முதலாவது நபர்கள் இவர்களாவர்.
  • வங்க தேசத்திற்கான இந்திய உயர் ஆணையர் திரிபுராவுடன் வங்க தேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தை இணைக்கின்ற தற்பொழுது கட்டமைக்கப்பட்டு வரும் வங்க தேசத்தில் உள்ள பெனி (Feni) பாலத்தை ஆய்வு செய்தார்.
    • இது இந்தியாவின் வடகிழக்கு மற்றும் வங்க தேசம் ஆகியவற்றிற்கிடையே வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கான ஒரு பெருவழிப் பாதையாக கட்டமைக்கப்படுகின்றது.
  • இந்தியாவின் முன்னனி இரு சக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தனது நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக கொலம்பியாவைச் சேர்ந்த தொழில்சார் கால்பந்து வீரரான எர்ரி பெர்னாண்டோ மினா கொன்சாலேஸ் என்பவரை நியமித்துள்ளது.
    • இவர் பிரான்சில் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிபா உலகக் கோப்பை போட்டியில், ஒரே உலகக் கோப்பையில் அதிகக் கோல்களை அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
  • சீனாவின் ஜிங்டாய் நகரில் நடைபெற்ற ஆசியக் கண்ட சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் 14 வயது நிரம்பிய இந்திய சதுரங்கப் போட்டி கிராண்ட் மாஸ்டரான நிஹல் சரீன் வெற்றி பெற்றுள்ளார்.
  • ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா அரங்கில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் சர்வதேச ஹாக்கிக் கூட்டமைப்பின் (FIH - (Federation Internationale de Hockey) ஆண்கள் பிரிவு ஹாக்கியின் இறுதிப் போட்டித் தொடரில், இந்தியா 5-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
    • இந்த வெற்றியின் மூலம் FIH உலகத் தரவரிசையில் முதல் 5 இடங்களில் இந்தியா இடம் பிடித்துள்ளது.
  • மகாராஷ்டிராவின் புனேவில் நடத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டின் 76வது மூத்தோர் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியத் தொழில்சார் ஸ்குவாஷ் வீரரான ஜோஸ்னா சின்னப்பா தேசிய ஸ்குவாஷ் பட்டத்தை வென்றுள்ளார். இவர் 17வது முறையாக இப்பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
  • உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மூன்று முறை ஒலிம்பிக் பட்டத்தை வென்றவரான பிராடி எலிசன் என்பவர் மலேசியாவின் கைரூல் அனார் முகமது என்பவரை வீழ்த்தினார்.
    • பெண்களின் கலப்பு அணி மற்றும் தனிநபர்கள் பிரிவுகளில் 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் ஆகியவற்றைப் பெற்று இந்தியா போட்டியை நிறைவு செய்துள்ளது.
  • ராண்ட்ஸ்டாட் பணியளிப்பவர் நிறுவன ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, மின்னணு முறையிலான நிறுவனமான அமேசான் இந்தியாவானது இந்தியாவின் மிகவும் “விரும்பத்தகுப் பணியளிப்பவர் நிறுவனமாக” வகைப்படுத்தப் பட்டுள்ளது. இந்தப் பட்டியலின் இரண்டாவது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்