இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளுக்கு சீன யுவானை (சீனாவின் நாணயம்) பயன்படுத்த பாகிஸ்தானின் மத்திய வங்கியான பாகிஸ்தான் ஸ்டேட் பேங்க் அனுமதியளித்துள்ளது. சீன யுவானின் பயன்பாட்டை ஏற்றுக் கொண்டதன் மூலம் சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டலத் திட்டத்தின் (China-Pakistan Economic Corridor) கீழ் மேற்கொள்ளப்படும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க டாலர்களுக்குப் பதிலாக சீன யுவானை இனி இவ்விரு நாடுகளும் பயன்படுத்தும்.