மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருமான வரித்துறையானது தன்னுடைய தேசிய இணையதளத்தில் “‘Live Chat Online - ask your query’” எனும் நிலையான அடையாள குறியீடுடைய (icon) ஆன்லைன் பேச்சுவார்த்தை சேவை (on-line chat service) தளத்தை துவங்கியுள்ளது.
வரிசெலுத்துவோரின் நேரடி வரிகள் தொடர்பான சந்தேகங்கள், அடிப்படை கேள்விகளுக்கு வருமான வரித்துறையின் சார்பில் இத்தளத்தில் பதில் வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுடைய குறைகள் தீர்க்கப்படும்.
“ஆயகார் சேது” எனும் கைபேசி செயலியின் வழியேயும் இந்த சேவையை அணுகிட இயலும்.