TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 25 , 2019 1985 days 723 0
  • இந்தியா தனது அண்டை நாடுகளுடன் உறவை வலுப்படுத்தும் விதமாக, வங்க தேசம் மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளில் தூர்தர்ஷன் (டிடி) இந்திய அலை வரிசையை ஒளிபரப்ப அவ்விரு நாடுகளுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
    • வங்க தேச அரசின் “BTV World” என்ற அலைவரிசையும் தென் கொரிய அரசின் “KBS World” என்ற அலைவரிசையும் இந்தியாவின் இலவச தூர்தர்ஷன் சேனலினை ஒளிபரப்ப உள்ளன.
  • நவீனத் தொழில்நுட்பங்கள் கொண்டு செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனமான ரிவிகோ தேசிய சரக்குக் குறியீட்டைத் (NFI - National Freight Index) தொடங்கியுள்ளது. இந்தக் குறியீடு நாடு முழுவதும் வெவ்வேறு பாதைகள் மற்றும் வாகனங்களுக்கான சரக்குக் கட்டணங்களை நிகழ் நேரத்தில் அளிக்கும்.
    • இந்தக் குறியீடுகள் சரக்குகள் தளவாடத் துறை சார்ந்த பிரச்சினைகளை எளிமைப்படுத்துவது மற்றும் துறையை சீர்படுத்துவது ஆகியவற்றிற்கான ஒரு முயற்சியாகும்.
  • கடந்த 1 ஆண்டு காலத்தில் இந்தியாவில் உள்ள காடுகளின் பரப்பு 1 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் தற்பொழுது இந்திய நிலப் பரப்பில் காடுகளின் பரப்பு 24.39 சதவிகிதத்திற்கு மேல் உள்ளது என்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் மக்களவையில் அறிவித்தார்.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரான விரல் ஆச்சார்யா என்பவர், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இவருடைய பதவிக் காலம் முடிவடைய 6 மாத காலம் இருக்கும் பட்சத்தில் தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களுக்காக இவர் பதவி விலகியுள்ளார்.
    • 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கியில் இணைந்த போது இவருக்கு வயது 45 ஆண்டுகளாகும். இந்திய ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய இளம் துணை ஆளுநர் இவராவார்.
  • ஜப்பானின் ஹிரோசிமா ஹாக்கி அரங்கில் நடைபெற்ற மகளிர் FIH பிரிவு இறுதி ஹாக்கிப் போட்டித் தொடரில் போட்டியை நடத்திய ஜப்பானை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
  • மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்குடன் இணைந்து ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இலவச டிஷ் செட் டாப் (தொலைக்காட்சி ஒளிபரப்பு உபகரணங்கள்) பெட்டிகளை வழங்கினார்.
  • மங்கோலியாவின் உலன்பட்டரில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் மூத்தோர் ஆசிய கலைத் திறன் வாய்ந்த ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் வால்ட் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த பிரநதி நாயக் என்பவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
    • தீபா கரம்கர் மற்றும் அருணா ரெட்டி ஆகியோரைத் தொடர்ந்து வால்ட் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் 3-வது வீரர் இவராவார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்