TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 26 , 2019 1984 days 803 0
  • “சாலைப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை” நிர்வகிப்பதற்கு வேண்டி அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கான ஒரு திட்டம் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் தெரிவித்தார்.
    • தர்பன் தளத்தில் பதிவு செய்யப்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தப் பின்னர், அவர்களால் ரூ. 5 லட்ச நிதியைக் கோர முடியும்.
  • ஸ்ரீ தத்தா பிரசாத் ஜோக் என்பவரால் எழுதப்பட்ட “கீத இராமாயணத்தின்” இந்திப் பதிப்பை அரசின் பதிப்பகப் பிரிவு வெளியிடும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் அறிவித்துள்ளார்.
  • தமிழ்நாடு தண்ணீர் விநியோக மற்றும் வடிகால் வாரியமானது (TWAD - Tamil Nadu Water Supply and Drainage Board) தமிழ்நாட்டில் உள்ள நகரங்களின் விரிவான வட்டார அளவிலான வரைபடத்தைத் தயாரித்துள்ளது.
    • இது மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்காக நீர் உள்ள இடங்கள் ஆகியவற்றிற்கான தகுந்த பகுதிகளைக் காட்டுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்