மலையாளத் திரைப்படமான “வெயில் மரங்கள்” பிஜூகுமார் தாமோதரன் என்பவரால் இயக்கப்பட்டது. 22வது ஷாங்காய் சர்வதேசத் திரைப்படத் திருவிழாவின் போது “தலைசிறந்த கலைத்திறன் வாய்ந்த சாதனைக்கான” விருதை வென்ற முதலாவது இந்தியத் திரைப்படம் இதுவாகும்.
2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதியிலிருந்து நீலகிரி மாவட்ட நிர்வாகமானது நெகிழித் தண்ணீர் புட்டிகள், PET பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் நெகிழி அட்டைகளில் அடைத்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விற்பனையைத் தடை செய்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பிர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுகளில் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, கடற்கரை கைப்பந்தாட்டம் மற்றும் பாரா - டேபிள் டென்னிஸ் ஆகிய மூன்று புதிய விளையாட்டுகள் இணைக்கப்பட்டுள்ளன.