TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 27 , 2019 1851 days 614 0
  • மலையாளத் திரைப்படமான “வெயில் மரங்கள்” பிஜூகுமார் தாமோதரன் என்பவரால் இயக்கப்பட்டது. 22வது ஷாங்காய் சர்வதேசத் திரைப்படத் திருவிழாவின் போது “தலைசிறந்த கலைத்திறன் வாய்ந்த சாதனைக்கான” விருதை வென்ற முதலாவது இந்தியத் திரைப்படம் இதுவாகும்.
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதியிலிருந்து நீலகிரி மாவட்ட நிர்வாகமானது நெகிழித் தண்ணீர் புட்டிகள், PET பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் நெகிழி அட்டைகளில் அடைத்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விற்பனையைத் தடை செய்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பிர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுகளில் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, கடற்கரை கைப்பந்தாட்டம் மற்றும் பாரா - டேபிள் டென்னிஸ் ஆகிய மூன்று புதிய விளையாட்டுகள் இணைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்