வெளிக் கோள்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட நாசாவின் செயற்கைக் கோளானது (TESS - Transiting Exoplanet Survey Satellite) L 98–59b என்ற பெயர் கொண்ட ஒரு புதிய கோளைக் கண்டுபிடித்துள்ளது.
TESS ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தினால் 2018 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது. TESS என்பது பிரகாசமிக்க நட்சத்திரங்களுக்கு அருகிலுள்ள வெளிக் கோள்களைக் கண்டுபிடிப்பதற்காக அனுப்பப்பட்ட ஒரு வான்வெளித் திட்டமாகும்.
உள்நாடு மற்றும் கடற்கரையோரக் கடல்சார் தொழில்நுட்பத்திற்கான மையத்தை அமைப்பதற்காக கரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மத்தியக் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஆகியவற்றிற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
இது கப்பலின் வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் பரிசோதனை ஆகியவற்றின் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் மீது கவனத்தைச் செலுத்தவிருக்கின்றது.
தெலுங்கானா மாநில அரசு, மத்திய வேளாண் துறை அமைச்சகத்துடன் இணைந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச விதைப் பரிசோதனை கூட்டமைப்பு மாநாட்டை (ISTA - International Seed Testing Association) ஹைதராபாத்தில் நடத்திக் கொண்டிருக்கின்றது.
ISTA மாநாடு முதன் முறையாக தற்பொழுது ஆசியாவில் நடத்தப்படுகின்றது.
லண்டனில் உள்ள நாடாளுமன்ற அவையில் 3-வது இந்திய தினத்தைக் குறிப்பதற்காக ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையேயான “உறவில் புகழ்பெற்ற 100 நபர்கள்: பெண்களைக் கொண்டாடுகின்றது” என்ற ஒரு பரப்புரை ஐக்கிய இராஜ்ஜியத்தின் உள்துறைச் செயலாளரினால் தொடங்கப்பட்டது.
இந்தப் பட்டியலில் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கான இந்திய உயர் ஆணையர் ருச்சி கானாஷியாம், மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய கடலோரக் காவற்படையின் புதிய பொது இயக்குநராக நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஜுன் 30 அன்று அப்பதவியில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் இராஜேந்திர சிங் என்பவருக்குப் பின்பு இவர் அப்பொறுப்பை ஏற்கவிருக்கின்றார்.
இந்தியப் பத்திரிக்கைத் துறையில் சிறப்பு வாய்ந்த விருதானது “2019-ஆம் ஆண்டின் பத்திரிக்கையாளர்” என்ற பிரிவில் ரச்னா கைரா (தி டிரிபியூன் செய்திகள் சேவைகள்) என்பவருக்கு வழங்கப்பட்டது.
சிவப்பு மை விருதுகள் – இந்த வருடாந்திர விருதானது மும்பை பத்திரிக்கைச் சங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டதாகும்.