தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் (இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை) பெண்களைப் பணியில் அமர்த்துவதற்கு வழிவகை செய்யக் கூடிய வகையில் தொழிற்சாலைகள் சட்டம், 1948-ல் திருத்தம் செய்வதற்கு கோவா மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
1955 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று நிறுவப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியின் தொடக்கத் தினத்தை அனுசரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 அன்று பாரத ஸ்டேட் வங்கி தினம் அனுசரிக்கப்படுகின்றது.
சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்பால் வெளியிடப்பட்ட “2018 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக் கட்டணங்கள்” என்ற ஒரு அறிக்கையின்படி, குறைந்த கட்டணத்தில் சூரிய ஆற்றலை உற்பத்திச் செய்வதில் சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவின் தேசிய பேட்மிண்டன் அணியின் தலைமைப் பயிற்சியாளரான புல்லேலா கோபிசந்த் என்பவர்க்கு கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தினால் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் 52-வது பட்டமளிப்பு விழாவின் போது இப்பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
பிரகாஷ் படுகோனுக்குப் பிறகு, அனைத்து இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை (2001) வென்ற ஒரே இந்தியர் கோபிசந்த் ஆவார்.
இராஜஸ்தான் மாநில அரசு வேதக் கல்வி வாரியம் மற்றும் கலாச்சார வாரியத்தை அம்மாநிலத்தில் அமைக்க முடிவு செய்துள்ளது.