TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 2 , 2019 1846 days 673 0
  • தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் (இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை) பெண்களைப் பணியில் அமர்த்துவதற்கு வழிவகை செய்யக் கூடிய வகையில் தொழிற்சாலைகள் சட்டம், 1948-ல் திருத்தம் செய்வதற்கு கோவா மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • 1955 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று நிறுவப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியின் தொடக்கத் தினத்தை அனுசரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 அன்று பாரத ஸ்டேட் வங்கி தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்பால் வெளியிடப்பட்ட “2018 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக் கட்டணங்கள்” என்ற ஒரு அறிக்கையின்படி, குறைந்த கட்டணத்தில் சூரிய ஆற்றலை உற்பத்திச் செய்வதில் சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் தேசிய பேட்மிண்டன் அணியின் தலைமைப் பயிற்சியாளரான புல்லேலா கோபிசந்த் என்பவர்க்கு கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தினால் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் 52-வது பட்டமளிப்பு விழாவின் போது இப்பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
    • பிரகாஷ் படுகோனுக்குப் பிறகு, அனைத்து இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை (2001) வென்ற ஒரே இந்தியர் கோபிசந்த் ஆவார்.
  • இராஜஸ்தான் மாநில அரசு வேதக் கல்வி வாரியம் மற்றும் கலாச்சார வாரியத்தை அம்மாநிலத்தில் அமைக்க முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்