இந்தியாவின் மேம்பாட்டுப் பொருளாதாரத்திற்கான பல்துறை ஆராய்ச்சித் திட்டமான “Stride” (Scheme for Trans-disciplinary Research for India’s Developing Economy’) என்ற ஒரு புதிய திட்டத்திற்கு பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தின் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தாய்லாந்தின் பாட்டயாவில் நடைபெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரரான வைபவ் யாதவ் என்பவர் தாய்லாந்தைச் சேர்ந்த பாக்பெட்ச் சிங்மானாசாக் என்பவரை வீழ்த்தி WBC ஆசிய வெள்ளி வெல்டர்வெய்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
இந்தக் குத்துச் சண்டையானது உலக குத்துச் சண்டை மன்றத்தினால் (World Boxing Council - WBC) ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஆசியக் குத்துச் சண்டை ஆணையத்தினால் நடத்தப்பட்டது.
பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரிடமிருந்து பி.எஸ்சி செவிலியர் பட்டத்தைப் பெற்ற முதலாவது மூன்றாம் பாலினத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரஷிகா ராஜ் ஆவார்.
ஹரியானா மாநில அரசு, தனது வடக்குப் பகுதி மாவட்டங்களில் “ஜல் ஹி ஜீவன் ஹய்” என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஒரு பயிர்ப் பன்மயமாக்கத் திட்டமாகும். இது நெல் விளையும் பகுதிகளை குறைவாக நீர் தேவைப்படக் கூடிய சோளம், அர்ஹர் டால் (துவரம் பருப்பு), மற்றும் சோயா அவரை போன்றப் பயிர்களைப் பயிரிடும் பகுதிகளாக மாற்றுவதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கின்றது.