TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 4 , 2019 1844 days 637 0
  • ஐதராபாத் மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் குவாண்டெல்லா இங்க் என்ற நிறுவனத்திற்கு உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) 2019-ஆம் ஆண்டிற்கான “தொழில்நுட்ப முன்னோடிகள்” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசு நாகாலாந்து மாநிலத்தின் முழுப் பகுதியையும் “பாதிக்கப்பட்ட பகுதியாக”, ஆறு மாத காலத்திற்கு இம்மாநிலத்தை AFSPA (Armed Forces Special Powers Act) சட்டத்தின் கீழ் அறிவித்துள்ளது.
    • இச்சட்டம் முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் எந்தவொரு நபரைக் கைது செய்யவும், சோதனைகளை மேற்கொள்ளவும் பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரமளிக்கின்றது.
  • அடிப்படைத் தேய்மானம் மற்றும் இலாப செயல் மாற்றத்தைத் (BEPS - Base Erosion and Profit Shifting) தடுப்பதற்கு வேண்டிய வரி ஒப்பந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக பலதரப்பு ஒப்பந்தத்தை இந்தியா உறுதி செய்துள்ளது.
    • இந்த பலதரப்பு ஒப்பந்தம் என்பது BEPS என்பதனை எதிர்கொள்வதற்காக G20 அல்லது OECD அமைப்பின் தீர்மானத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்